பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

வளர்ச்சிக்கு ஒரு காரணமாகும். இஸ்லாம் ஆன்மீக அடிப்படையில் அமைந்த மார்க்கம் என்ற கருத்துணர்வையே அண்மைவரை மேலை அறிவுலகம் கொண்டிருந்தது. ஆனால், இன்று இஸ்லாத்தின் அடித்தளப்பண்பை அறிந்துணரும் அறிஞர் பெருமக்கள் அறிவியல் மார்க்கமாகவே இஸ்லாத்தைக் காண முனைந்துள்ளனர். இதற்கான விளக்கங்களையும் ஆதாரபூர்வமாகத் தந்து சிந்திக்கத் தூண்டி வருகின்றனர்.

ஃபிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற மருத்துவ அறிஞரான டாக்டர் மாரிஸ்புகைல், இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த டாக்டர் அலிசன், அமெரிக்காவைச் சேர்ந்த கணிப்பொறி விஞ்ஞானி மைக்கேல் ஹெச்.ஹார்ட் போன்றவர்களெல்லாம் அண்ணலாரின் வாக்கமுதும் திருமறை தரும் இறைமொழியும் இன்றைய அறிவியல் உண்மைகளை உலகுக்குணர்த்துவதோடு நாளைய அறிவியல் வளர்ச்சிகள் இஸ்லாத்தின் மேன்மையை, உன்னதத்தை உலகுக்குத் திறம்பட உணர்த்தவிருக்கின்றன என்பதைத் தெளிவாக்கும் நூல்களை ஆராய்ச்சி அடிப்படையில்,அசைக்க முடியாத சான்றுகளோடு எழுத்துருவில் தந்து உலகைச் சிந்திக்கத் தூண்டி வருகின்றனர்.

மைக்கேல் ஹெச், ஹார்ட்டின் ஏக்கம்

உலகில் தோன்றி தங்கள் தனித்த செல்வாக்கால் உலக வரலாற்றையே ஒட்டு மொத்தமாக மாற்றியமைத்த உலகச் சாதனைச் செல்வர்களின் பட்டியலைத் தொகுத்து,அதில் தலைசிறந்து விளங்கும் நூறு பேர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை ஒன்று முதல் நூறுவரை வரிசைப்படுத்தி, அந்த நூறு உலக சாதனையாளர்களுள் முதலாம்வராக நாயகத் திருமேனி அவர்களைப் பொறித்த “திஹன்ரட்”(The 100) நூலின் ஆசிரியர் மைக்கேல் ஹெச். ஹார்ட் அவர்கள்.