பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

பெருமை பெருமானாரையும் அவர் வழியாக வல்ல அல்லாஹ் உலகுக்கு வகுத்தளித்த இறைமொழியான திருமறையையுமே சாரும் என்பதை மறுப்பதற்கில்லை.

அறிவியல் வளர்ச்சிக்கு உந்து சக்தியான இஸ்லாமிய அனைத்துலகப் போக்கு

அனைத்துலக நோக்குடைய இஸ்லாத்தின் ஆன்மீகக் கோட்பாடுகள் முன்னரே முளைவிட்டிருந்த அறிவியல் சிந்தனையிலிருந்து அதிகம் வேறுபடாததாகவும் அதே சமயத்தில் அதனுடைய ஏதாவதொரு அம்சத்துடன் தொடர்புடையதாகவும் இலாமிய அறிவியல் அமையலாயிற்று.

இஸ்லாமிய அறிவியல் என்பது அண்ணலாரின் அருங்கருத்துகளும் திருமறை வெளிப்படுத்திய மெய்ப்பொருளும் இஸ்லாம் மரபுரிமையாகப் பெற்ற நாகரிகங்களின் அறிவியல் அம்சங்களும் ஒன்றிணைந்ததன் விளைவாக உருவானதாகும்.

இஸ்லாமியச் சிந்தனையும் நாகரிகமும் அனைத்துலகப் பொது நோக்குடையதாதலின் இஸ்லாமிய அறிவியல் வளர்ச்சியும் உலகளாவிய பன்னாட்டு இயல்புடைய ஒன் றாகவே வளரலாயிற்று.

அறிவியல் என்றால் என்ன?

இஸ்லாமிய அடிப்படையில் பெருமானாரின் வாக்கின் வழியே விஞ்ஞான வளர்ச்சி அரபு நாட்டில் எப்படிக் கால்பதித்து வளர்ந்து வளம் பெற்றது என்பதை அறியுமுன் அறிவியல் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம்.