பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

அறிவுத் தேடலில் துடிப்பு

அறிவு எங்கிருந்தாலும் அதைத் தேடிப் பெறவேண்டும் என்ற அண்ணலாரின் அறிவுரையால் தூண்டப்பட்ட அன்றைய முஸ்லிம் ஆர்வலர்கள் அறிவை — புதிய புதிய செய்திகளைத் தேடி எங்கும் செல்லலாயினர். அறிவு வேட்கைமிக்க இவர்கட்கு புதிய கருத்துக்கள் சிந்தனைகள் எழுத்துருவில், நூல் வடிவில் எவையெல்லாம் கிடைக்கிறதோ அவற்றையெல்லாம் பெற்று, படித்து உணர்ந்து, சிந்தித்து, அதன் மூலம் புதிய சிந்தனைகளை உருவாக்கிப் பரவச் செய்ய அன்றைய முஸ்லிம்கள் முற்பட்டனர், இதற்காக சாக்ரட்டீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்றவர்களின் தத்துவச் சிந்தனைகளை யெல்லாம் கிரேக்கத்திலிருந்து அரபு மொழியில் பெயர்க்க முற்பட்டனர். அவற்றையெல்லாம் அறிந்தபோது. அவை வெறும் தத்துவங்களாக மட்டும் இருக்கவில்லை கணிதம் முதல் வானவியல் ஈராக மனிதகுல முன்னேற்றத்துக்குத் துணைபுரிய வல்ல துறைகள் அத்தனையும் பற்றிய கருவைக் கொண்ட சிந்தனைக் களஞ்சியங்களாக அமைந்திருந்தன.

அறிவியல் சிந்தனைகளுக்கு கொள்கைவடிவம் தந்த கிரேக்கம்

இஸ்லாம் எழு முன் எகிப்து, பாபிலோன் பகுதிகளில் நாகரிக வளர்ச்சியின் பயனாகக் கணிதம், வானியல், மருத்துவம் போன்ற அறிவியல் துறைகள் பலவும் சூழ் (கரு) கொண்டிருந்தன என்பது அனைவரும் அறிந்த ஒப்ப முடிந்த உண்மையாகும். அவற்றைப் பண்டைய கிரேக்கப்பொற்காலத்தைச் சேர்ந்த ஆற்றல்மிகு சிந்தனையாளர்களாக முகிழ்ந்தெழுந்த பிளட்டோ , அரிஸ்டாட்டில், பித்தகோரஸ் போன்றோர் இல்வறிவியல் சிந்தனைகளுக்குக் கொள்கை வடிவம் வழங்கினர். பிற்காலத்தில் கிரேக்க மையமாகவே மலர்ந்து அறிவுமணம் வீசிய