பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

அறிவியலின் தாய் - கணிதம்

அன்றும் இன்றும் விஞ்ஞான வளர்ச்சியின் உயிர் மூச்சுசாக அமைந்து வருவது கணிதமாகும். அறிவியலுக்கு மட்டுமல்ல; தருக்க வாதத்தத்துவச் சிந்தனைகளுக்கும்கூட கணிதவியலே அடிப்படை என்கிறார் காட்ஃபிரே ஹார்டி என்ற மேனாட்டுக் கணிதவியலறிஞர்.

“Mathematics is about beautiful patterns of logical thought"

அதாவது. கணிதம் என்பது , தருக்கமுறைக் சிந்தனை எழிற்கோலங்கள் பற்றியது" என்பது அவருடைய கருத்து.

ஏனெனில், கணிதம் என்பது அறிவுக் கூர்மையுடன் தொடர்புடையதாகும்.

“ஒலி, மொழி, வண்ணங்கள் போன்றவற்றின் எழிற்கோலங்களை உருப்படுத்திக் காட்ட முயல்கின்ற இசை,கவிதை, ஓவியம் போன்ற கவின் கலைகளுக்கு ஒப்பானதுகணிதம்" என இன்னொரு மேதை கூறியுள்ளார்.

கவின் கலைகளும் ஒரு வகையில் கணித முறையில் மறைமுகமாக அமைவது என்பதே ஓப்ப முடிந்த உண்மை யாகும்.

பன்முகக் கணித வளர்ச்சிக்கு வழி வகுத்த முஸ்லிம்கள்

அண்ணலாரின் தூண்டுதலால் — திருமறையின் கட்டளையால் அறிவு வேட்கைமிக்க இஸ்லாமியர்களைக் கணிதக்கலை வெகுவாகக் கவர்ந்ததில் வியப்பொன்றும் இல்லை கணிதக் கலையில் அவர்கள் காட்டிய பேரார்வப் பெருக்கின் விளைவாக விரைவிலேயே கணிதம் பன்முகங்களாக