பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31

முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டன. சரியான அடிப்படையில் முகிழ்ந்தெழுந்த கணக்கியலின் பல்வேறு பிரிவுகள் நாளடைவில் அரபு மொழிப் பெயரோடவேதுலங்கலாயின.

அரபி மொழிவழி கணிதக் கலைச் சொற்கள்

இன்று கணிதவியலில் வழங்கும் பெரும்பாலான கலைக் சொற்கள் அரபிச் சொற்களின் அடிப்படையில் உருவான கலைச் சொற்களாகவே அமைந்துள்ளதற்கு மேற் கூறியதே முழு முதற் காரணமாகும்.

முழுமையாக அறியப்படாத ஒன்றைக் குறிக்க சாதாரணமாக ‘X’ என்ற குறியெழுத்தைக் கையாள்கிறோம். தான் புதிதாகக் கண்டுபிடித்த, பொருளினுள் ஊடுருவிச் செல்லும் வல்லமை படைத்த புதிய ஒளிக்கதிருக்கு என்ன பெயரிடுவது என்று திகைத்த ராண்ட்ஜன் எனும் இயற்பியல் விஞ்ஞானி அதற்கு ‘X’ கதிர் (X-Ray) என்று பெயரிட்ட வரலாறு நாம் அறிந்ததே. இன்றும் 'X'எக்ஸ்-ரே என்ற அழைக்கப்பட்டு வருகிறது. இந்த ‘X’எனும் குறியீடு பழங்கால முஸ்லிம்கள் கணித நூல்களில் பயன்படுத்திய ‘ஷே’ என்ற அரபி உழுத்தின் அடிப்படையில் உருவானதாகும்.

அதே போன்று ‘சைஃபர்’, ‘ஸீரோ’ (0) போன்ற கணிதவியல் கலைச் சொற்களும் அரபிச் சொற்களாகவே அமைந்திருப்பது எண்ணத்தக்கதாகும்.

இயற்கணிதம்

கணிதவியலின் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் போது இயற்கணிதத்தை வகுத்தவர்கள் அரபு நாட்டு முஸ்லிம் கணிதவியல் அறிஞர்களே என்பது உள்ளங்கை