பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

நெல்லிக்கனி போன்று தெள்ளத் தெளிவாகும் உண்மையாகும்.

இயற்கணிதவியல் துறையில் குறிப்பிடத்தக்கப் பெருந் தொண்டாற்றிய பெருமைக்குரிய ஆய்வறிஞராக விளங்குபவர் முஹம்மது இப்னு மூஸா அல் குவார்ஸ்மி எனும் முஸ்லிம் மேதையாவார். கி.பி. 180 முதல் 850 வரை வாழ்ந்த இவர் கலீபா அல் மாமூனின் நூலகராவார். இவர் கணிதவியலில் கொண்டிருந்த நுண்மாண் நுழைபுலம் அறிந்த கலீஃபா இவருக்கெனத் தனி ஆய்வுக் கூடத்தையே அமைத்துத் தந்திருந்தார். இவர் தாலமியின கணிதவியல் சிந்தனைகளைத் திறம்பட ஆய்ந்து, தான் கண்டறிந்த புதிய உண்மைகளை எழுத்து வடிவில் வெளிப்படுத்தியவராவார். இதன் மூலம் இவர் வானியல் ஆய்வுக்கு வழி வகுத்தார் என்பது மேனாட்டார் கணிப்பாகும்

இவரது கணிதவியல் நூல் அக்காலத்தில் விரும்பிலத்தீன் மொழியில் பெயர்க்கப்படட்து. பின்னர் அந்நூல் ஐரோப்பிய மொழிகளில் ஐரோப்பாவெங்கும் அறிமுகமாகியது. இவ்வாறு இந்நூல் அறிமுகமான பின்பே மேலை நாடுகளில் அறிவியல் ஆராய்ச்சி வேகமும் விறுவிறுப்பும் பெறலாயிற்று.

அல்ஜிப்ரா

அதே போன்று அல் குவாரிஸ்மி உருவாக்கிய புகழ்மிகு கணித நூல் ‘கிதாப் அல் ஜாபர் வல் முகாபலா’ என்பதாகும் அந்நூலின் பெயர் அடிப்படையிலேயே பிற்காலத்தில், அல்ஜிப்ரா என்ற பெயர் அமையலாயிற்று. ‘அல்ஜிப்ரா’ என்ற பெயர் ‘அல்ஜாபர்’ என்பதன் திரிபு வடிவமாகும் என்பாரும் உண்டு.

அல்கோரிஸம்

அவ்வாறே ‘அல்கோரியும்’ என்ற கணிதப் பெயர் ‘அல்குவாரிஸ்மி, என்பதின் திரிபு எனக் கூறப்படுகிறது. அல்—