பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

குவாரிஸ்மி மாபெரும் கணிதவியல் வல்லுநர் என்பது முன்பே நாம் அறிந்த செய்தியாகும்,

திரிகோணமிதி - ஜாமெட்ரி

கணிதவியலின் மற்றொரு முக்கியப் பிரிவு 'திரிகோணமிதி'யாகும். இத்துறையை உருவாக்கி வளர்த்து வளப்படுத்தியவர்களும் முஸ்லிம் கணிதவியல் வல்லுநர்களேயாவர். நஸ்ருத்தீன் என்பவர்தான் ‘திரிகோணமிதி’ கணிதப் பிரிவையும் ‘ஜாமெட்ரி’ எனும் கணிதப் பிரிவையும் கண்டறிந்தவர்.

அடிப்படை திருகோணமிதி சார பலனைக் குறிக்க‘சைன்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இச்சொல் அரபிமொழி மூலச் சொல்லான ‘ஜேய்ப்’ என்பதன் நேர்மொழி பெயர்ப்பாகும். திரிகோணமிதி சமன்பாடுகள் பலவற்றை வகுத்த பெருமையும் அரபு முஸ்லிம்களையேசாரும்.

வடிவ கணிதம்

கணிதவியலின் மற்றொரு பகுதி ‘வடிவ கணிதம்’ஆகும். இதன் வளர்ச்சி பற்றிக் கூறுவதற்குமுன் மற்றொரு செய்தியைச் சொல்ல வேண்டியது அவசியமாகும்.

யூக்ளிடின் கணிதவியல் கோட்பாடு

கணிதவியலின் அடிப்படைக் கோட்பாடுகளை முதன்முதலில் வகுத்தளித்த பெருமைக்குரியவர் 'யூக்ளிடு' எனும் கிரேக்கக் கணிதவியல் அறிஞராவார். அவரது கணிதவியல் கோட்பாடுகளை அடியொற்றியே அரபு நாட்டு முஸ்லிம் கணிதவியல் வல்லுநர்கள் ‘வடிவ கணித’க் கோட்பாடுகளை உருவாக்கினர்.

3