பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

புகழ்பெற்று விளங்கும் அரபு எண்குறிகளை முழுமையாக உருவாக்கி உலகுக்கு வகுத்தளித்தவர்கள் முஸ்லிம்களே என்பது தான் எண் கணித வரலாறு தரும் உண்மைச்செய்தி.

கூட்டுச் சாதனை அறிவியல்

பொதுவாக, அறிவியல் வளர்ச்சி என்று எடுத்துக்கொண்டால் அதன் எந்த ஒரு பிரிவின் வளர்ச்சிக்கும் ஒரு தனி நபரோ, இனமோ அல்லது நாடோ தனியுரிமை கொண்டாட முடியாது ஏனெனில் அறிவியல், தொழில்நுட்பச் சாதனைகள் அனைத்தும் உலகின் பல்வேறு பகுதிகளின் பங்களிப்பால் உருவானவை என்பதே முழு உண்மை .

அதிலும், அடுத்தடுத்து வந்த தலைமுறையினரின் முயற்சியாலும் உழைப்பாலும் முதிர்ச்சி பெற்று ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி நிலையை எய்துவதாகும். இதே கருத்தைத் தான் புகழ்பெற்ற வானவியல் வல்லுநரும் ஈர்ப்பாற்றலை கண்டறிந்த விஞ்ஞானியுமான “ஐசக் நியூட்டன்” எனக்கு முந்தியவர்களைவிட நான் மிகுதியாக வானைப் பார்க்க முடிகிறதென்றால், அதற்குக் காரணம் நான் அந்தப் பெரும் திறனாளர்களின் தோள்களின் மீது நின்றுகொண்டு பார்ப்பது தான் என்று கூறியுள்ளது இங்கு நினைவுகூறத் தக்கதாகும்.

இதன்படி பார்த்தால் ஒரு பதிய கண்டுபிடிப்பானது பல ஆய்வார்களின் — விஞ்ஞானிகளின் முயற்சியால் — உழைப்பால் — மேற்கொண்ட தொடர் ஆராய்ச்சிகளால் விளைந்தவை என்பது தெளிவாகிறது. ஆயினும், யாரேனும் ஒரு விஞ்ஞானி முந்தைய கண்டுபிடிப்புகளை ஒருங்கிணைத்து இறுதி வடிவு தந்து அதன் முத்தாய்ப்பான முடிவை எட்டுகிறபோது, அக்கண்டுபிடிப்பு அவரின் பெயரைத் தாங்க நேர்கின்றது.