பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

விஞ்ஞானிகளே என்பதை சார்ட்டன் தன் அறிவியல் வரலாற்று நூலில் தெளிவாக்கியுள்ளார்.

அதுமட்டுமல்ல அறிவியலில் பல்துறை அறிவும் திறனும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற மாமேதை அவிசென்னா எனும் இப்னு சினாவே இயக்க அளவு, இயக்க விசை,உந்து விசை ஆகியவைகளைத் துல்லியமாக முதன் முதலில் கண்டறிந்தவர் என்பது வரலாறாகும்.

பதினெட்டாம் நூற்றாண்டில் இயக்க அளவு பற்றி டெஸ்கார்ட்டிஸ். ஹியூஜென்ஸ், பீனிட்ஸ் போன்ற விஞ்ஞானிகள் செய்த ஆராய்ச்சி முடிவுகள் இப்னு சினாவின் ஆராய்ச்சியையும் முடிவையுமே ஒத்திருந்தன.

சக்தியையும் நேரத்தையும் மிச்சப்படுத்திய சக்கரம்

அரபு நாட்டு முஸ்லிம்களால் கண்டறியப்பட்டு வடிவமைக்கப்பட்ட சக்கரம் பயன்பாட்டுக்கு வந்த பிறகே போக்குவரத்தில் மாபெரும் மாற்றமும் வளர்ச்சியும் தலை தூக்கியது. போக்குவரத்து வாகனங்கள் பல்வேறு வகையினவாக உருவாகலாயின் குறைந்த அளவு சக்தியைப் பயன்படுத்தி அவற்றைத் திறம்பட இயக்கிப் பயன் பெறமுடிந்தது. இதனால் அதிக அளவில் விரையமாகி வந்த மனித ஆற்றலோடு அரிதான நேரமும் வெகுவாக மிஞ்சியது. இதனால், குறைந்த காலத்தில் நிறைந்த பயன்களைப் பெற ஏதுவாகியது. இதனால் முஸ்லிம்களால் உருவாக்கப்பட்ட சக்கரங்களை போக்குவரத்துச் சாதனங்களின் வளர்ச்சிக்கு வழிகோலிய ஒரு புரட்சிக் கண்டுபிடிப்பு எனக் கூறினும் பொருந்தும்.

நீர்ச் சுழல் இயந்திரக் கருவி கண்டுபிடிப்பு

சக்கரங்களால் சுழலும் இயந்திரத்திலும் நீரால் சுழலும் இயந்திரத்தை முஸ்லிம்கள் கண்டுபிடித்த பின்னரே