பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

அவசரத் தேவை ஏற்பட்டது. இதன் விளைவாசத் தென்மேற்குப் பாரசீகத்தில் ஜண்டேசபூர் எனுமிடத்தில் ஒரு சிறந்த வானவியல் ஆய்வுக்கூடம் உருவாக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து இதைவிடச் சிறப்புடையதாகவும் நுணுக்கமாகவும் துல்லியமாகவும் கணக்கிடக்கூடிய கருவிகளைக் கொண்ட வானவியல் ஆய்வுக்கூடத்தை கலீஃபா அல் மாமூனின் உறுதுணையோடுபாக்தாது நகரில் அமைக்கப்பட்டது. இதுவே அதிகபட்ச நுண் சாதனங்களுடன் கூடிய முதல் வானவியல் கூட்டமாகும்.

வானவியல் ஆய்வு இஸ்லாமிய நாடுகளில் உச்சநிலை பெற்ற 10ஆம் நூற்றாண்டிற்குள் சுமார் 1.5 உயர் தரமான, தரமான வானலியல் ஆய்வுக் கூடங்கள் நாடெங்கிலும் சிறப்பாக இயங்கி வந்தன. பாக்தாது நகரம் இஸ்லாமிய நாடுகளின் வானவியல் ஆய்வு மையமாகவே விளங்கி வந்ததெனலாம்.

எத்தகைய வானவியல் ஆய்வுகளை அன்றைய முஸ்லிம் விஞ்ஞானிகள் மேற்கொண்டார்கள்? அவர்கள் ஆய்வு செய்து உலகத்துக்குக் கண்டுபிடித்து வழங்கியவை எவை எனக் காணும்போது நாம் ஆச்சரியத்தால் வியக்கிறோம்

சந்திரனின் இயக்கத்தை முதன் முதல் கண்டறிந்தவர்கள் முஸ்லிம்களே!

அதுவரை சந்திரனின் இயக்கத்தைப் பற்றிய அனுமானக் கருத்துக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பரவியிருந்ததே தவிர, சந்திரனின் இயக்கத்தை யாரும் துல்லியமாகக் கணக்கிட்டறிந்திருக்கவில்லை. ஆனால்,நீண்ட காலம் தொடர்ந்து மேற்கொண்ட முனைப்பான ஆய்வின் பயனாகக் சந்திரனின் இயக்கத்தைத் துல்லிய