பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43

மாகக் கண்டறிந்து கூறியவர் அலி இப்னு அமாஜர் என்பவரும் அபுல் ஹஸன் அலி என்பவரும் ஆவர்.

அன்றைய வானவியல் ஆய்வாளர்களுள் குறிப்பிடத்தக்க மற்றொருவர் ஷரப் அல் தௌலா என்பவராவார்.பாக்தாது நகரைச் சேர்ந்த இவர் சிறந்த வானவியல் ஆய்வுக் கூடமொன்றை அமைத்து, வானவியல் ஆய்வாளர்களில் பலரை அதில் ஆய்வு செய்யச் செய்தவர். அங்கு ஆராய்ச்சி செய்துவந்த வானவியல் விஞ்ஞானிகளில் குறிப்பிடத்தக்கவர் அப்துல் ரஹ்மான் அல் தாபித் என்பவராவார். இவர் பல அரிய ஆராய்ச்சிகளைச் செய்துவந்தவர். தம் ஆய்வு முடிவுகளை நூலாக எழுதியுள்ளார். “அல்கவாகிப் அல் தாபித” எனும் பெயரில் அந்நூல் இன்றும் உள்ளது.

இயற்பியல் ஆராய்ச்சியில் மிகச் சிறந்து விளங்கிய மற்றொரு அறிவியல் அறிஞர் இப்னு அஹமத் அல் பிரூனி எனும் முஸ்லிம் ஆய்வாளர் ஆவார். கி.பி. 973 இல் பிறந்த இவர் 1048 ஆம் ஆண்டுவரை 75 ஆண்டுக்காலம் இவர் பல்துறை விஞ்ஞான அறிவு வாய்க்கப் பெற்றவராக விளங்கினார். இயற்பியல் துறை வல்லுநரான இவா மருத்துவத் துறையிலும் சிறப்பறிவு பெற்றவராக விளங்னார். கனம் குறைந்த வைரக்கற்களின் எடையைக் கணக்கிடும் முறையைக் கண்டறிந்தவர் அதே சமயம் கனம்மிகுந்த பல்வேறு உலோகங்களின் கனத்தை நிறுத்துக்கணக்கிடும் முறையையும் கண்டறிந்து. அவற்றின் இயல்பான எடையைக் கணித்தறிந்தார். இவற்றையெல்லாம் பற்றி நூல்கள் பல எழுதியவர். அத்துடன் அக்கால வானவியல் வல்லுநர்களில் ஒருவராகக் கருதப்பட்ட இவர் வானவியல் ஆராய்ச்சிகளையும் நூல் வடிவில் தொகுத்துள்ளார்.

துல்லிய நாளோடு கண்டவர்

அக்காலத்தில் விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கு உதவுவதில் நாடாளும் மன்னர்கள் பேரார்வம் காட்டினார்.