பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

ராவார். ஈர்ப்பு விசை பற்றிய இவரது கண்டு பிடிப்புக் கொள்கையே பிற்காலத்தில் ஐசக் நியூட்டன் ஈர்ப்புக்கொள்கை உருவாக்கத்துக்கு வழியாயமைந்தது எனலாம்.அதே போன்று கலிலியோவில் வானவியல் ஆய்வுக்கும் வழியமைத்துச் சென்றவர் இப்னு அல்ஹைத்தாம் என்பவரே என வானவியல் வரலாறு விளக்குகிறது.

கண்ணொளியியல் தந்தை

அக் காலத்தில் புகழ் பெற்ற வானவியல் வல்லுநராகத் திகழ்ந்த இப்னுஅல்-ஹைத்தாம் கண் மருத்துவ மேதையாகவும் போற்றப்படுகிறார். ‘கண்ணொளியியல் தந்தை’என அழைக்கப்படும் ஹைத்தாம் மருத்துவத்திலும் திறம்பெற்ற மேதையாக இருந்துள்ளார் குறிப்பாகப் பார்வையியலில் தனியாற்றல் பெற்றவல்லுநராக விளங்கியுள்ளார் ஒளியுமிழும் திறன் பெற்ற பொருள்கள் வெளிப்படுத்தும் ஒளியைக் கண் பெறுகிறது என்ற உண்மையை முதன் முதலாகக் கண்டறிந்தவர் இவர். இவருக்கு முன்னதாக இருந்தவர்கள் பார்வை ஒளிபற்றியும் கண்ணின் அமைப்பு,அவற்றின் இயக்கம் ஆகியவை பற்றியும் சரியாகத் தெரிந்திருக்கவில்லை. கண்ணிலிருந்து வெளிப்படும் ஒளி பொருட்கள் மீது படிவதால்தான் பொருள்களைக் காணமுடிகிறது என்று கருதி வந்தார்கள். இத்தொடுபுலன கோட்பாடு முற்றிலும் தவறானது என்றும், நாம் பார்க்கும் ஒளிரும் பொருட்களிலிருந்து வெளிப்படும் ஒளியைக் கண்ஏற்பதன் மூலம் பார்வைத்திறன் ஏற்படுகிறது என்ற சரியான கண்டுபிடிப்பைக் கண்டறிந்து கூறியவர் இப்னு அல்-ஹைத்தாமே ஆவார் இதைக் கண்டறிந்து கூறியவர் அல் கிந்தி என்பாரும் உண்டு. இக்கருத்தே மிகச் சரியானதென இன்று ஒப்புக் கொள்ளப்படுகிறது. இதன் பின்னரே கண்ணொளியியல் பற்றிய சரியான கணிப்புகள் உருவாக இயன்றது.இக்கண்டுபிடிப்பு இத்துறையில் ஒரு திருப்புமுனையாகும்.

.