பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50


இத்தகைய பயணங்களின் விளைவாக உலகப்பூகோளப்படம் வரைய வேண்டிய கட்டாயத்தேவை அன்றைய முஸ்லிம் பூகோள அறிஞர் கட் கு ஏற்பட்டது.

உலகின் முதல் பூகோளப்படம்

பூகோளப்படம் வரைவதில் உலகிலேயே கிரேக்கர்கள் தான் சிறந்து விளங்கினார்கள். தாலமி வரைந்த பூகோளப்படம்தான் உலகின் முதல் பூகோளப் படம். ஆனால்,அதில் பல குறைகள் இருந்தன. அக்குறைகளைக் களைந்து தாங்கள் பெற்ற கடற்பயண, தரைப் பயண அனுபவ அடிப்படையில் திருத்தமான பூகோள வரை படத்தை உருவாக்க முனைந்தனர் முஸ்லிம்கள்.

இத்தகைய நோக்கத்தை நிறைவேற்றும் முறையில் பூகோள அறிவுமிக்க வல்லுநர் குழுவை அன்றைய கலீஃபா அல் மாமூன் அமைத்தார். இத்துறையில் தேர்ந்த சிந்தனையாளராகத் திகழ்ந்த அல் கவாரிஸ்மியின் தலைமையில் எழுபது நிபுணர்களைக் கொண்டது அக்குழு.

இந்தக் குழுதான் முதன் முதலாக தாலமியின் வரை படத்தைவிட தெளிவான, திருத்தமான உலகின் பூகோளப் படத்தை வரைந்தளித்தது. அதன் அடிப்படையில் உருவானதே இன்றையப் பூகோளப்படம்

முதல் பூகோள தகவல் களஞ்சியம்

இத்துறையில் அல் கவாரிஸ்மிக்கு அடுத்த நிலையில் முத்திரைப் பணியாற்றிப் பெரும்புகழ் தேடியவர் இப்னு அப்துல்லாஹ் அல் ஹமாபி எனும் பூகோளவியல் ஆய்வறிஞர் ஆவார். இவரை வரலாற்றாசிரியர்கள் சுருக்க மகா ‘யாகூத்’ என்று குறிப்பிடுவர். கி.பி. 1177 முதல்