பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55

அளிக்கவல்ல திசைக்காட்டிக் கருவியைக் கண்டுபிடித்த பெருமையும் முஸ்லிம் விஞ்ஞானிகளையே சாரும் இத்தகுசாதனையை மேனாட்டு அறிஞர்களான ஜார்ஜ் சார்ட்டன் ஃபிலிப் ஹிட்டி, சர் பர்ட்டன் போன்றவர்கள் குறிப்பிட்டுப் பாராட்டத் தவறவில்லை

ஐரோப்பியர் பெற்ற அரிய பாடம்

“முஸ்லிம்கள் பெற்றிருந்த பூகோள அறிவும் கண்டுபிடிப்புகளும், அவர்களது கடலாய்வு, நாடாராய்ச்சி,வணிகம் பொருட்டு உலகெங்கும் மேற்கொண்ட கடற்பயண அனுபவங்கள் ஐரோப்பியர்களுக்கு அரிய பாடமாகும்” என டேவிட் ஸ்டரைடர் அவர்கள் குறிப்பிட்டுள் ளது எண்ணத்தக்கதாகும்.

நீண்டகால கடல் ஆதிக்கம்

கடல் தொடர்பான இத்தகைய முயற்சிகளும் புதிய புதிய கண்டுபிடிப்புகளும் முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டதன் விளைவாக, நீண்ட நெடுங்காலம் கடல் ஆதிக்கம் முஸ்லிம்களிடமே இருந்தது.

மத்திய காலத்தில் சுமார் 26,000 கப்பல்கள் அரபு வணிகர்களிடம் இருந்ததாக வரலாறு கூறுகிறது. அரபுநாட்டு வணிகர்கள் இந்தியா, சீனா, ஜாவா, சுமித்ரா,இலங்கை, ஆஃப்ரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட உலகின் பல பகுதிகளுக்கும் வணிக நிமித்தம் சென்று வந்தனர். இவ்வாறு அரபு வணிகர்களிடம் உலகக் கடலாதிக்கமும் இருந்ததை எளிதாக உணர முடிகிறது.

ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே சூயஸ் கால்வாய் திட்டம்

சுமார் நூறு ஆண்டுகட்கு முன்பு எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாய் வெட்டப்பட்டதன் விளைவாக மத்திய