பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

தரைக் கடலையும் செங்கடலையும் இணைக்க முடிந்தது.இதனால் ஆஃப்ரிக்கக் கண்டத்தைச் சுற்றிக் கொண்டு இந்தியா போன்ற கீழ்த்திசை நாடுகட்குச் செல்ல பலநாட்கள் செலவழிக்க வேண்டிய நிலை மாறி, இன்று சில மணிநேரங்களில் சூயஸ் கால்வாயைக் கடந்து. செங்கடலில் நுழைந்து இந்தியாவை அடைய முடிகிறது. இதனால மேற்கு கிழக்குக் கடல்வழி மிகக்குறுகிய ஒன்றாக அமைந்து விட்டது. இதற்குப் பெரும் காரண மாயமைந்துள்ள சூயஸ் கால்வாயை வெட்ட வேண்டும் என்று ஆலோசனை வழங்கியவர் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த டீ லெஸ்ஸப்ஸ் எனும் பொறியியல் அறிஞ்ராவார். ஆனால் அவருக்கும் ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே கலீஃபா ஹாரூன் அல் ரஷீத அவர்கள் சூயஸ் கால்வாயை வெட்டி மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இணைப்பதன் மூலம் மேற்குக்கும் கிழக்குமிடையிலான கப்பல் போக்குவரத்தைத் தட்டுத் தடங்கலின்றி நடத்தத் திட்டார் என்ற குறிப்பை அவர் கால வரலாற்று நூல்களில் காண முடிகிறதென்றால் முஸ்லிம்களின் அறிவியல் தொலைநோக்குப் பார்வை நம்மை வியக்க வைக்கிறது.அந்த அளவுக்கு அறிவியல் உணர்வும் சண்ணோட்டமும் ஆய்வறிஞர்களிடம் மட்டுமன்றி நாடாளும் தலைவர்களிடமும் காணப்பட்டதை அறிய வியப்பாக இருக்கிறது.

வாஸ்கோடகாமாவின் வழிகாட்டி ஒரு முஸ்லிமே!

கொலம்பஸுக்கும் முன்னதாகக் கடல்வழியாக இந்தியாவை அடைய முனைந்தவர் வாஸ்கோட காமா. இஸ்லாமிய பூகோள விற்பன்னர்கள் அன்றுவரை கண்டறிந்து கூறிய அனைத்துக் கண்டுபிடிப்புகளையும் நன்கு தெரிந்துகொண்ட லாஸ்கோட காமாவின் வழிகாட்டியாக விளங்கியவர் அக்காலத்தில் திறம்பட்ட கடலாய்வாளராக விளங்கிய இப்னு மஜீத் எனும் முஸ்லிம் வல்லுநரே என்பது வரலாற்று உண்மை.