பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

57


முதன் முதலாகக் தென்னாப்ரிக்காவின் தன்னம்பிக்கை முனை வழியாக இந்திய மேலைக் கடற்கரைப் பகுதியான கள்ளிக்கோட்டையை வந்தடைந்த ஐரோப்பிய நாடாய்வாளர் வாஸ்கோட காமாவே ஆவார்.அவரது இந்தியக் கடல்வழிப் பயண வெற்றிக்கு எல்லாவகையிலும் உறுதுணையாயமைந்தவர்கள் முஸ்லிம் ஆய்வறிஞர்களே என்பது அவரது பயண வரலாற்றில் காணும் உண்மையாகும்.

இந்தியப் பெருங்கடலிலும் அட்லாண்டிக் பெருங்கடலிலும் பலமுறை நெடும் பயணம் மேற்கொண்டதோடு ஆஃப்ரிக்கக் கண்டத்தையே கடல் வழி வலம் வந்த சிறப்புக்குரியவர்கள் சுலைமான் அல் மஹ்ரி எனும் மாலுமியும் இப்னு மஜீத் எனும் கப்பல் தலைவருமாவார்.இவர்கள் எழுதி வைத்துள்ள பயணக் குறிப்புகள் கடற்பயண மாலுமிகளுக்கும் கடலாய்வாளர்களுக்கும் வழிகாட்டிப் படைப்புகளாக அமைந்தனவெனலாம். இப்னு மஜீதின் நூல்கள் கடற்பயண வழிகாட்டி நூல்களாலேபல காலம் பயன்படுத்தப்பட்டது.

மூன்று கண்டங்களில் முஸ்லிம்களின் வணிக ஆதிபத்தியம்

மத்திய காலத்தில் அரபு வணிகர்களுக்குச் சொந்தமான பல்லாயிரம் வணிகக் கப்பல்கள் கடல்களில் இடையறாப் பயணம் செய்தவண்ணம் இருந்தன என்றும் கண்டோம். இன்னும் சொல்லப் போனால் ஆசியா, ஆஃப்ரிக்கா, ஐரோப்பா, ஆகிய மூன்று பெருங் கண்டங்கடலாதிக்கமும் வணிக ஆதிபத்தியமும் முஸ்லிம்களின் கரங்களிலே அடக்கமாயிருந்தன என்றுதான் சொல்ல வேண்டும். பதினொராம் நூற்றாண்டின் இறுதி வரை உலகச் சந்தைகளாக மூன்று முக்கிய நகரகங்கள் விளங்கின.