பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

அவை பாக்தாது, பொக்காரா, சாமர்கண்ட் ஆகிய நகரங்களாகும் இங்கு உலகம் முழுவதிலிருந்து வணிகர்களும் வணிகப் பொருட்களும் குவிந்து பின் அங்கிருந்து மற்ற இடங்களுக்குச் சென்றதாக வரலாறு கூறுகிறது

பொருட்களோடு அரபுச் சொற்களும் ஏற்றுமதி

பிறநாட்டுப் பொருட்களுடன் தங்கள் நாட்டின் தனி உற்பத்திப் பொருட்களான கம்பளங்கள், பட்டுத் துணிமணிகள், அலங்கார விளக்குகள், உலோகக் கட்டாரிகள் ஊசிகள் போன்றவற்றையும் பெருமளவில் கொண்டு சென்று விற்பனை செய்தனர். பொருட்களோடு தங்கள் அரபு மொழிச் சொற்களையும் அங்கே விட்டு வந்துள்ளனர் என்பதை இன்றும் ஐரோப்பிய மொழிகளில் வழங்கிவரும் 'மான் சூ' ‘கேபிள்’ ‘அட்மிரல்’ போன்ற அரபிச்சொற்கள் கட்டியங் கூறிக்கொண்டிருக்கின்றன.

புவியீர்ப்பு விசையை முதன் முதல் கண்டுபிடித்த முதல் முஸ்லிம் விஞ்ஞானி

இயக்கவிதி பற்றியும் ஒளிச் சிதறல் பற்றியும் ஐசக்நியூட்டன் கண்டுபிடிப்பதற்கு பன்னெடுங் காலத்துக்கு முன்பே இப்னு அல் ஹைத்தாம் கண்டறிந்து கூறியதோடு, இக் கண்டுபிடிப்புப் பற்றிய விவரங்களை எழுத்துருவில் நூலாகவும் எழுதி வைத்துள்ளார். மரத்திலிருந்து கீழே விழுந்த ஆப்பிள் பழம் மேலே செல்லாமால் கீழ் நோக்கிப் பாய்ந்து விழுந்ததுக்குக் காரணம் அதை பூமியின் - மண்ணின் மையப்பகுதி ஈர்த்து இழுப்பதேயாகும் என 'புவியீர்ப்பு விசைத் தத்துவத்தை ஐசக் நியூட்டன் கண்டறிந்து கூறுவதற்குப் பல நூறு ஆண்டுகட்கு முன்பே கி பி , 1122 ஆம் ஆண்டுவாக்கில்