பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அல் காஸினீ என்பவர் கண்டறிந்து கூறினார். காற்றுக்கும் எடை உண்டு என்பதையும் கண்டறிந்து கூறியவரும்இவரே யாவார்.

வானில் தோன்றும் வானவில்லில் இடம்பெற்றுள்ள வண்ணங்கள் உருவாவதற்கான காரணங்களைக் கண்டறிந்து கூறிய குத்புத்தீன் அஸ்ஷராஸீயே ஒளிச் சிதறல்களைத் தடுக்கும் கண்ணாடி வில்லைகளை கண்டுபிடித்தளித்தார்.

ஒளி செல்லும் வேகம்

வெப்பம், ஆற்றல், இயக்கம் ஆகியவற்றின் இயல்பு பற்றி நன்கு ஆராய்ந்து சில அடிப்படை அறிவியல் உண்மைகளைக் கண்டறிந்து கூறி இப்னு அலி சினா (கி.பி.980-1037) ஒளியானது ஒளிபிறங்குகின்ற மூலங்களில்லிருந்து கணக்கிடப்படக்கூடிய வேகத்தில் வெளிப்படுகிறது என்ற விஞ்ஞான உண்மையையும் கண்டறிந்து கூறியவராவார்.

ஃபெர்மார்ட்டுக்கு முன்னோடியான ஊடு பொருள் வழிடி ஒளி புகும் கோட்பாடு

‘கண்ணொளியியல் தந்தை’ எனப் போற்றப்படும் இப்னு அல் ஹைத்தாம் ‘கண்ணொளியியலில் ஓர் ஒளிக்கதிர் ஓர் ஊடு பொருள் வழியாகச் செல்லும்போது,விரைந்து செல்லும் பாதையையே தேடுகிறது’ எனக்கண்டறிந்து கூறினார். இக்கோட்பாடே பிற்காலத்தில் இத்துறையின் பெரும் அறிவியல் வல்லுநராகத் திகழ்ந்த ஃபெர்மார்ட் என்பவருக்கு முன்னோடிக் கோட்பாடாக அமைந்தது.