பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63

நச்சுத் தன்மை கொண்ட தாதுப் பொருட்களை உரியமுறையில் வேதியியல் அடிப்படையில் மாற்றமுறச் செய்து அவற்றை நோய் நீக்கும் மருந்துப் பொருட்களாகப் பயன்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினர். இதன்மூலம் மருந்தியல் துறை வளர்ச்சியும் முனைப்பும் பெறலாயிற்று.

இவ்வாறு வேதியியல் துறை சரியான தோற்றம் பெறவும் முறையான வளர்ச்சியடையவும்வழியமைத்த பெருமை அக்கால முஸ்லிம் வேதியியல் ஆய்வாளர்கட்கே உரியதாகும் என்பதை இன்றும் வேதியியல் ஆய்வாளர்கள் நினைவு கூரவே செய்கிறார்கள். இன்றைய வேதியியல் துறையின் வளர்ச்சிக்கான அடித்தளத்தை அழுத்தமாக அன்றைய முஸ்லிம்கள் அமைத்ததன் விளைவாகத் தான் பின்னால் வந்த வேதியியல் துறை விற்பன்னர்கள் அத்துறையில் வீறுநடைபோட முடிந்தது.

அரும்பெரும் மருத்துவர் அண்ணலார்

அறிவியலின் பிற துறைகளைப் போன்றே அன்றைய இஸ்லாமியர்கள் மருத்துவத்துறையிலும் பெரும் முன்னேற்றம் கண்டிருந்தார்கள். அண்ணல் நபிகள் நாயகம் (சல்)அவர்களே மருத்துவ முறைகள் நன்கு தெரிந்த வல்லுநராக விளங்கியவர்கள்.

அண்மையில் நான் ஹஜ் கடமையை நிறைவு செய்ய புனித மக்கா, மதினா பயணத்தை மேற்கொண்டேன் .அப்போது உடன் இருந்த பாகிஸ்தான் ஹாஜி ஒருவரும் துருக்கி நாட்டு ஹாஜி ஒருவரும் ‘பில்லிசான்’ என்று ஓர் மருத்துப்பெயரைச் சொல்லி இந்த மருந்தை ஊருக்குக் கட்டாயம் வாங்கிச் செல்ல வேண்டும் என்றனர். மேலும் தொடர்ந்து அந்த மருந்து இங்கு தவிர வேறு எங்கும்