பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

65


இரசவாதத் தந்தை

பெருமானார் காலத்திற்கு முன்னர் இருந்த மருத்துவமுறை இரசவாதக் கலையோடு இணைந்த ஒன்றாகவே இருந்தது. இந்தத்துறையில் வியக்கத்தக்க திறமையாளராக அக்காலத்தில் போற்றப்பட்டவர் ஜாபிர் இப்னு ஹையான் என்பவர் ஆவார். எட்டாம் நூற்றாண்டில்கூட கூஃபாவில் வாழ்ந்த இவரே வரலாற்றாசிரியர்களால் ‘அரப் இரசவாதத் தந்தை’ எனப் போற்றப்படுகிறார்.

இரசவாதக் கலையும் புதிய மருத்துவ முறைகளும்

அண்ணலார் அவர்கள் உடல் பிணி தீர்க்கும் மருத்துவர்களைப் பெரிதும் மதித்தார் மருத்துவ ஆய்விலும் பணியிலும் முனைப்புக் காட்டும் வகையில் அவர்களைத் தூண்டி வந்தார். இதன் மூலம் மருத்துவத் தொழில் மிகப்புனிதமான தொழிலாக அன்றைய முஸ்லிம்களால் கருதப்பட்டது. மருத்துவர்களுக்குச் சமுதாயத்தில் மிகப் பெரும் அந்தஸ்தைப் பெருமானார் அவர்கள் உருவாக்கித் தந்தார் இதனால் மருத்துவத்தில் புதிய முறைகளும் மருந்து உருவாக்கத்தில் புதிய செயற்பாடுகளும் ஏற்படலாயின. இரசவாத முறையினின்றும் விடுபட்ட மருத்துவ முறை சீரான வழியில் செழிப்பாக வளர பல மருத்துவ அறிஞர்களும் ஆய்வாளர்களும் பெரிதும் உழைக்கலாயினர்.

அக்கால முஸ்லிம்கள் கண்டறிந்த மருத்துவ முறைகளே பிற்காலத்தில் மருத்துவத் துறை மாபெரும் முன்னேற்றத்தை அடைய அடிப்படையாக அமைந்தது.

மருத்துவ மலர்ச்சிக்குக் காரணமான இரு பெரியார்கள்

மருத்துவத்துறை மலர்ச்சிக்குக் காரணமாயமைந்தவர்களாக மருத்துவ வரலாற்றில் குறிக்கப்படுபவர் இருவர்.

5