பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71

அறிவுத்திறன் மிக்க விளையாட்டாகக் கருதப்பட்ட சதுரங்கத்தை(செஸ்) உலகுக்களித்த நாடு இந்தியாவே என்ற தகவலும், மிகச் சிறப்பாக வளர்ந்திருந்த இந்திய மருத்துவத் தனித்தன்மைப் பற்றிய செய்திகளும், கவின்மிகு கலைத்திறனும் கவிப்புலமையும் சிற்பச் சிறப்பும் கொண்ட இந்தியா மெய்யறிவுக் கலையின் தோற்றுவாயாகவும் அமைந்திருந்ததை நூல்களின் மூலம் பயணிகள் வாயிலாகவும் அல்பிரூனி அறிந்தபோது இந்தியாவைக் காணவேண்டும் என்ற வேட்கை இயல்பாகவே அவருக்கு எழுந்தது.

பன்முறை இந்தியா சென்று வந்த அல் பிருனி

கஜினி முஹம்மதுவின் பெரும்படை அல்-பிரூனி வாழ்ந்த குவாரிஸத்தைத் தாக்கி அழித்து, அங்கிருந்த ஆயிரமாயிரம் மக்களைச் சிறைப்படுத்தியது. அதே போன்று கஜினி முஹம்மது இந்தியாவையும் தாக்கி,அங்கிருந்து பல நூறு பேரைச் சிறைப்பிடித்துக் குவாரிஸம் கொண்டு வந்தார். இவ்வாறு சிறை பிடிக்கப்பட்டவர்களுள் அல்- பிரூனியும் ஒருவர் சிறைப்பட்ட அல் - பிரூனியும் இந்திய அறிஞர்களும் அப்போது சந்தித்துப் பழகும் வாய்ப்பு எதிர்பாரா நிலையில் ஏற்பட்டது. அப்போது இந்தியாவைப் பற்றி அதிக அளவில் தெரிந்து கொள்ளும் அரிய வாய்ப்பும் அல்-பிரூனிக்கு உண்டாகியது. இதன் பின்னர் விடுதலை பெற்றபின் எப்படியும் இந்தியா சென்று அங்குள்ள அனைத்துச் செய்திகளையும் அறிந்து வரவேண்டும் என்ற அறிவுத்தாகம் அடக்க முடியாத அளவுக்கு அவர் உள்ளத்தில் ஊற்றெடுத்துப் பொங்கத் தொடங்கியது அறிவை வளர்க்க வளப்படுத்த எங்கும் சென்று வருதல் வேண்டும் என்ற அண்ணலாரின் அறிவுரையை நெஞ்சத்தில் அழுந்தப் பதித்திருந்த அல்-பிரூனி பன்னிரண்டு ஆண்டுகள் இந்தியா வேட்கையோடு இருந்தார். அதற்கு முன் இந்தியா சென்று வந்த இஸ்லாமிய