பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74


கானூன்’ எனும் கலைக்களஞ்சிய நூல் மற்றும் அண்டவியல், காலமுறை . பூகோளம், கணிதம், வானவியல் முதலான 11 தொகுப்புகளையும் இவர் எழுதியுள்ளார்.

பல்துறை வல்லுநர் இப்னு சினா

அல் - பிரூனியைப் போன்றே இப்னு சினாவும் மருத்துவத்துறை உட்பட அறிவியல் துறைகள் பலவற்றிலும் ஆழ்ந்த புலமைமிக்கவராகவும் ஆராய்ச்சி வல்லுநராகவும் விளங்கினார்.

இவர் காலத்தில் இவருக்கு இணையாக வேறு யாரும் இல்லையோ என வியக்குமளவுக்கு பல்பொருள் அறிவு நிரம்பிய தத்துவவித்தகராக, தலைசிறந்த மருத்துவக்கோட்பாட்டாளராக, திறம்படக் கற்பிக்கும் ஆசானாக,நோய் தீர்க்கும் திறன்மிகு மருத்துவராக, மருந்தியல் வல்லுநராகத் தன் காலத்தில் வாழ்ந்தவர்.

இப்னு சினா பால்க்கில் கி.பி. 980 (ஹிஜிரா 370)இல் பிறந்தார். இப்னு சினா தன் பதினாறாம் வயதிலேயே மருத்துவ அறிவாற்றல் மிக்கவராகத் திகழ்ந்தார். இவரது மருத்துவத் திறமையைக் கேள்வியுற்ற புக்காரவின் அமீர் நூஹ் இப்னு மன்ஸர் என்பவர் பதினாறு வயது இளைஞரான இவரை தனக்கு ஏற்பட்டுள்ள நோயைக் குணப்படுத்த அழைத்தார் என்றும் இப்னு சினாவும் அவ்வழைப்புக்கிணங்கச் சென்று மருத்துவம் செய்து அமீரைக் குணப்படுத்தினார் என்றும் அவரது வாழ்க்கை வரலாற்று நூலில் குறிக்கப்பட்டுள்ளது.

இணையிலா இளமைப் படிப்பு

புக்காரா அமீரின் நோயைக் குணப்படுத்தியதன் விளைவாக அவரது அன்புக்குரியவராக, அரண்மனைச் செல்