பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

அவரது படைப்புக்களாக 160 நூல்கள் மட்டுமே பட்டியலிடப் பட்டுள்ளன.

இப்னு சினா, அல் - பிரூனி அறிவியல் விவாதம்

அல்- பிரூனியும் இப்னு சினாவும் சமகால அறிவியல் மேதைகள் என்பதை முன்பே கண்டோம். இருவருக்குமிடையே 7 வயது வேறுபாடு இருந்தது இருவரில் இப்னு சினா இருபது வயதடைந்தபோது அவரது அறிவியல் திறமை முஸ்லிம் உலகெங்கும் நன்கு பரவியிருந்தது அல் பிரூனி ஒளி. வெப்பம். அடர்த்தி வெற்றிடம் தொடர்பாகத் தமக்கு ஏற்பட்ட பல ஐயப்பாடுகளைத் தீர்த்துக்கொள்ள இப்னு சினாவை நோக்கிப் பல வினாக்களை அடுத்தடுத்துத் தொடுத்துப் பதிலளிக்குமாறு கேட்டார் அவர் விடுத்த வினாக்களுக்கு இப்னு சினாவும் சளைக்காமல் ஆதாரபூர்வமான காரணங்களின் அடிப்படையில் பதில் தந்து அல்–பிரூனியின் ஐயப்பாடுகளைப் போக்கினார் ஆயினும், மேலும் தெளிவு பெறவும் மேலும் பல புதிய அறிவியல் செய்திகளை அறிந்து கொள்ளவும் இப்னு சினா அளித்த பதில்களின் மீது மேலும் சந்தேகங்களை எழுப்பினார் அல் பிரூனி. அதற்கும் தக்க விடைகளைத் தந்தார் இப்னு சினர். இக்கேள்வி பதில விவாதங்கள் அறிவியல் சிந்தனையிலும் வளர்ச்சியிலும் எந்த அளவுக்கு முஸ்லிம்கள் அன்று ஆழ்ந்த கவனம் செலுத்தி வந்தார்கள் என்பதை இப்போது எண்ணினாலும் வியப்பாக இருக்கிறது.

இது போன்ற அறிவியல் விவாதங்கள் காலந்தோறும் அறிவியலாளர்களிடையே நடைபெற்று வந்துள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை . ஆனால், ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு இப்னு சினாவுக்கு அல் பிரூனிக்கும் அறிவியல் தொடர்பாக நடைபெற்ற வினாவிடைவிவாதம்