பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

காற்றுக் குளிர்வதால் குடுவையினுள் வெற்றிடம் உருவாகிறதென்றும் இத்தகைய வெற்றிடத்தை உருவாக்க முடியாததால் குடுவை உடைகிறது என்றும் இப்னு சினா பதில் அளிக்கிறார்.

‘பனிக்கட்டியின் பருப்பொருள் பாகங்கள் நீரைவிட அதிகமாக இருப்பதால் அது பளுவானதாக அல்லவா இருக்கவேண்டும். ஆனால். பனிக்கட்டி ஏன் நீரில் மிதக்கிறது’ எனக் கேட்கிறார் அல் பிரூனி உறையும் போது பனிக்கட்டி தனது உள்ளிடங்களிலும் குறுக்குப் பின்னலமைப்புகளிலும் காற்றுப் பாகங்களைப் பத்திரப்படுத்தி வைக்கிறது. இறைகளே , பனிக்கட்டி நீரில் மூழ்க விடாதபடி தடுக்கின்றன’ என்கிறார் இப்னு சினா.

அல்- பிரூனியின் கேள்விகளைக் கவனமாக ஆய்ந்தால் அலை அறிவியல் வரலாற்றில் எவ்வளவு முக்கியத்துவம் மிக்கவை என்பது புலனாகும் இப்னு சீனாவின் பதில்களும் ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே முஸ்லிம் அறிவியல் அறிஞர்கள் இயற்கைத் தத்துவத்திலும் அதன் விஞ்ஞானப் பிரிவுகளான இயற்பியல், வேதியியல் ஆராய்ச்சிகளிலும் எவ்வளவு நுட்பமாக சிந்தித்து ஆராய்ச்சி பூர்வமாகச் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ள இவ்வினா விடை விவாதம் வாய்ப்பளிக்கிறது.இருவருக்குமிடை யே நடைபெற்ற வினா விடை விவாதங்கள் "அஸ்இலா வல் அஜ்விபா' எனும் நூலாக அமைந்துள்ளது. அஃது அறிவியலோடு அனைத்து அண்டங்கள் பற்றியும் தத்துவங்கள் முதலாக உள்ள அனைத்துப் பொருள்கள் பற்றியும் அமைந்துள்ளன.

அறிவியல் துறை வளர்ச்சிக்கு ஆதாரமான அறிவாற்றல், பகுத்தறிவு பற்றிய அல்- பிரூனியின் கண்ணோட்டம் அன்றைய இஸ்லாமிய அறிவுலகம் அறிவியல் பற்றிக்கொண்டிருந்த உணர்வையும் கருத்தையுமே முழுமையாகப் பிரதிபலிப்பதாக உள்ளது.