பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

79


“அறிவியல் அண்மையில் தோன்றியதெனச் சிலரும் அஃது உலகைப் போன்று பழமையானதெனப் பிறரும் கருதுகின்றனர். இன்னும் சிலர், அதன் நுட்பங்கள் சமய அறிவினால் புலப்படுகின்றன” என்றும் கூறுகின்றனர்.மேலும் சிலர். ஒவ்வொரு நுட்பமும் ஒரு குறிப்பிட்ட தீர்க்கதரிசியினால் வெளிப்படுத்தப்பட்டு நிலைநாட்டப் பெற்றதாகவும் கூட கருதுகின்றனர். ஆனால், பிறர் மனிதன் தனது அறிவாற்றலின் பயனாக நுட்பங்களைக் கண்டுபிடிக்கிறான் என்றும் பகுத்தறிவின் வாயிலாகவே மனம் உணர்வுத் திறனைப் பெறுகிறதென்றும் கருதுகினறனர்.

“ஒருவர் பகுத்தறிவின் மூலமாக ஒரு விதியை அல்லது கொள்கையைக் கண்டு பிடிக்கும்போது பொதுக் கூற்றிலிருந்து தனிக் கூற்றிற்கு வரவேண்டும். ஆயினும் செயலாய்வும் சிந்தனையும் ஒன்றை மற்றொன்றோடு ஒப்பிட்டு,நுணுக்க விவரங்களை அறியச் செய்கின்றன....

“காலம் வரையற்றது; தொடர்ந்து வரும் தலைமுறைகள் ஒரு பகுதியையே கடக்கின்றன. ஒவ்வொன்றும் தனது மரபினை அடுத்ததற்கு விட்டுச் செல்கின்றது. அடுத்து வருவது அதை வளர்த்து வளப்படுத்துகிறது.”எனக் கூறும் அல்-பிரூனியின் கருத்து சிந்திக்கத் தக்கதாகும்.

பொதுவாக அறிவுத் தேட்டமே மனித வாழ்வின் மேன்மை மிகு குறிக்கோளாக இருக்க வேண்டும் என்ற பெருமானாரின் உணர்வுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்களே அல் - பிரூனியும் இப்னு சினாவும். புகழ்மிகு கணிதவியல் மேதையாகத் திகழ்ந்த அல்-பிரூனி வானவியல் துறை முதல் மருந்தியல் துறைவரை எழுதாத துறையே இல்லை எனலாம். முதன் முதலாக