பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

81


இதே போன்ற ஆனால் அளவில் சிறியதான மூலிகைத்தொகுப்பு நூலை கி.மு. முதலாம் நூற்றாண்டில் கிரேக்க மருத்துவர் டியோஸ் கோரிடஸ் சுமார் 600 மருந்துச்செடிகளின் பெயர்களைத் தொகுத்துத் தந்திருந்தார். ஆனால், அதைவிட ஐந்து மடங்கு பெரிதான , மருத்துவக்குணங்களை முழுமையாக விவரிக்கும் நூலை இவரே எழுதினார்.

மூலிகை பற்றிய நூலாக இருந்தாலும் தாவரவியல் பற்றிய சிறந்த அறிவியல் நூலாகக் கணிக்கப்படுகிறது. தாவரவியல் பற்றி அன்றைய முஸ்லிம்களின் விஞ்ஞான அணுகுமுறை எத்தகையது என்பதை நன்கு தெரிந்துகொள்ள இந்நூல் பெரிதும் பயன்படுகிறது. அதிலும் உலகெங்கணும் உள்ள மூலிகைகளைப் பற்றிப் பேசுவதால் இஸ்லாமியரின் விரிந்து வந்த உலகியல் கண்ணோட்டம் எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ள இயல்கின்றது.

தாவரவியல் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு

மூலிகை ஆராய்ச்சியில் மட்டுமல்லாது பிற தாவர ஆராய்ச்சியிலும் முன்னிலை வகித்தவர்கள் அன்றைய தாவரவியல் வல்லுநர்களான முஸ்லிம்கள். இயற்பியல்,வேதியியல் போன்ற பல்வேறு துறைகளில் புதியன கண்டறிந்து வளர்ச்சிக்கு வழிகோலியது போன்றே தாவரவியல் துறைக்கும் பெரும் பணியாற்றியுள்ளனர் என்பது வரலாற்று உண்மையாகும். இதற்கு மூலிகை ஆராய்ச்சி பெரும் உந்துதலாக இருந்ததையும் மறுப்பதற்கில்லை.

மேலும், நீர்ப்பற்றாக்குறை நிலையும் குறைந்த அளவு நீரைக் கொண்டு இயன்றவரை அதிக அளவு விளைச்சலைப் பெருக்க வேண்டிய கட்டாயச் சூழ்நிலையும் தாவர

6