பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

வியல் ஆராய்ச்சிக்கு முஸ்லிம் விஞ்ஞானிகளை உந்தியது என்பதும் மறுக்கமுடியாத மற்றொரு காரணமாகும். இக்காரணங்களால் பயிர் வளர்ச்சியிலும் நீர்ப்பாசன முறைகளிலும் புதுப்புது உத்திகளைக் கையாண்டு பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வழங்கினர் அன்றைய முஸ்லிம் தாவரவியல் விஞ்ஞானிகள்.

நீர் இறைப்பு இயந்திரங்கள் எழுந்தன

அன்று வாய்க்கால் நீர்ப்பாசனமுறை செயலில் இருந்த போதிலும் நீர் இறைத்துப் பாய்ச்சிப் பயிர் வளர்க்கும் முறையைச் செயலுக்குக் கொண்டு வந்தவர்கள் முஸ்லிம்களே யாவர். இதற்காகக் காற்றாடி இயந்திரங்களையும் கீழ் மேலாக எழுந்து நீர் இறைக்கும் இயந்திரங்களையும் வடிவமைத்து உருவாக்கிப் பயன்படுத்தினார்கள் மண்ணின் தன்மைக்கேற்பப் பயிரிடும் முறையைச் செயல்படுத் தினார்கள். மண்ணின் வளம் பெருக்க உரம் தயாரித்துப் பயன்படுத்தும் முறையையும் நன்கு அறிந்திருந்தார்கள். இதற்காக உழவியல் ஆய்வுக் கூடங்களை உருவாக்கி புதிய புதிய கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தி விவசாய வளர்ச்சிக்கும் அக்கால முஸ்லிம் பயிரியல் விஞ்ஞானிகள் வழி காட்டிச் சென்றுள்ளார்கள்.

அன்றே பூச்சிக்கொல்லி மருந்து கண்டவர்கள்

எதிர்பாரா நிலையில் பூச்சிகள் பயிர்களைத் தாக்கி அழிக்கும்போது, தாவரங்களைப் பலவித நோய்கள் பிடித்துப் பாழ்படுத்தும் போதும் செய்வகை தெரியாது திகைத்து நின்றவர்கள் உழவர்கள் இவற்றிலிருந்து உழவர்களையும் பயிர் பச்சைகளையும் காக்கப் பலவிதமான சோதனைகளையும் ஆராய்ச்சிகளையும் முஸ்லிம் விவசாய வல்லுநர்கள் மேற்கொண்டு எம்முறையைப் பயன்படுத்தி