பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

85


காகிதத் தயாரிப்புக் கலையில் புரட்சிகர மாற்றம் கண்ட முஸ்லிம்கள்

தாவரப் பொருட்களிலிருந்து காகிதம் செய்யும் முறையைப் புரட்சிகரமாக உருவாக்கிய பெருமை அரபுநாட்டு முஸ்லிம்களையே சாரும். அன்று முதல் இன்றுவரை அறிவுப் பரிமாற்றத்துக்கு அடிப்படைப் பொருளாக அமைந்துள்ள காகிதம் செய்யும் கலை சீன நாட்டில் வேர் விட்டிருந்தாலும் செழுமையாக வளர்ந்த வளர்ப்புப் பண்ணையாக இருந்தது அரபு நாடேயாகும். இன்றுள்ள வடிவில் காகிதத்தை உருவாக்கும் தொழில் நுட்பங்களை உருவாக்கிய பெருமையும் முஸ்லிம்களையே சாரும்.

சீனாவில் தோன்றிய காகிதக்கலை அரபுநாடு சென்றது ஒரு சுவையான வரலாறு ஆகும்.

தரமான தாள் செய்த அரபிகள்

சீன நாட்டு அறிவியல் ஆய்வாளரான சாய் லுன் என்பவர் தான் முதன் முதலாகக் காகிதம் செய்யும் முறையை உருவாக்கினார். அதுவும் அவசிய, அவசரத் தேவையின் பொருட்டேயாகும்.

சாய் லுன் காலம்வரை வசதியான எழுது பொருள் எதுவும் இருக்கவில்லை அக்காலத்தில் எழுது பொருளாக ஆட்டுத் தோல், கன்றுகளின் தோல், மூங்கில் ஆகியவற்றின் மீது எழுதுவது வழக்கமாக இருந்து வந்தது.

அதே சமயத்தில் எகிப்து போன்ற மத்திய கிழக்கு நாடுகளிலும் மேற்கு நாடுகளிலும் ‘பாப்பைரைஸ்’ எனும் ஒருவகை எழுது பொருள் எழுதுவதற்குரிய சாதனமாகக் கையாளப்பட்டு வந்தது. இஃது பல குறைபாடுகளை யுடையதாக இருப்பினும் மூங்கிலில் எழுதுவதை விட எளிதானதாக இருந்தது மரம் அல்லது மூங்கிலிலான நூல்களைவிட 'பாப்பைரைஸ்' கையாளுவதற்கும் பிற