பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

இடகளுக்கு எடுத்துச் செல்வதாகும் ஏற்புடைத்தாகவே இருந்தது. என்றாலும் சீன அறிஞர் ஒருவர் தன்னோடு ஒரு சில நூல்களை எடுத்துச் செல்ல வேண்டியதாக இருந்தது.

சாய் லுன் காகிதத்தைக் கண்டுபிடித்த பின் நிலைமை வெகுவாக மாறியது. அறிவு விரைவாக வளரும் இனிய சூழ்நிலை உருவாகியது. இதனால் கலை, இலக்கியம், தத்துவம் முதலான நாகரிகக் கூறுகள் துரித வளர்ச்சி பெறலாயிற்று. இதனால் சீனா அன்று உலகத்தின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்ததில் வியப்பேதும் இல்லை.

சீனரைக் கடத்தி காகிதக் கலையைக் கற்றனர்

காகிதக் கண்டுபிடிப்பின் இரகசியங்களை அறிந்து கொள்ள அறிவு வேட்கை கொண்ட அக்கால அரபிகள் பெரிதும் அவாவினர். காகிதச் செய்முறைகளைத் தெரிந்து கொள்ள முயன்றனர். ஆனால், காகிதத் தயாரிப்பு முறைகளை மிகவும் இரகசியமாக வைத்திருந்த சீனா வேற்று நாட்டைச் சேர்ந்தவர்கட்குக் கற்றுத்தர அறவே விரும்பவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த அராபிய முஸ்லிம்களில் சிலர் காகிதத் தயாரிப்பு தொழில் இரகசியங்களை நன்கு அறிந்து கொள்ளும் பொருட்டு கி பி. 751 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு போரின்போது காகிதத் தயாரிப்பு தொழில் நுணுக்கங்களை நன்கு அறிந்திருந்த சில சீன வல்லுநர்களைத் போர்க் கைதிகளாகத் தந்திரமாக அரேபியாவுக்குக் கடத்திச் சென்று அவர்கள் மூலம் காகிதத் தயாரிப்பு முறைகளை அறிந்து கொள்ளலாயினர். சீன முறையில் காகிதத்தைத் தயாரிக்க மூங்கில் கழிகளை வெட்டிக் கழுவி, நீருள் அழுத்தி, நன்கு ஊறவைத்து, அதை மீண்டும் சீவிச் சீவிச் சின்னஞ்சிறு பகுதிகளாக்குவர் பின்னர் அவற்றைத் தூளாக்குவர். அதன்பின் அம் மூங்கில் துளை நன்கு வேகவைத்துக் கூழாக்குவர் சின்னஞ்சிறு துளைகளுள்ள சல்லடை மீது அக்கூழைப்பரப்பி கனமான