பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நூல் முகம்

'அஞ்சிலே ஒன்று பெற்றான்,

அஞ்சிலே ஒன்றைத் தாவி,

அஞ்சிலே ஒன்று ஆறு.ஆக,

ஆர்உயிர்க் காக ஏகி,

அஞ்சிலே ஒன்று பெற்ற

அணங்கைக்கண்டு, அயலார் ஊரில்

அஞ்சிலே ஒன்றை வைத்தான்,

அவன்நம்மை அளித்துக் காப்பான்'

- கவிநாயகன் கம்பன்

இராம காதையில் வரும் கதை மாந்தர்களுள் ஈடும் எடுப்பும் அற்றவன், அநுமன். வீடு பேற்றையும் வேண்டாத விறலினன், இராமபிரானின் புகழ் பாடி, இராம நாமத்தை உச்சரித்துக்கொண்டு சிரஞ்சீவியாக நம்மிடையே இன்றும் இருப்பவன்; என்றும் இருந்துகொண்டிருப்பவன். இவனைப் பற்றி எழுத நினிைத்தது 1948இல், அஃது இராமபிரான் அருளால் இரண்டாயிரம் ஆண்டு முடிந்து மூன்றாயிரம் ஆண்டுத் தொட்க்கத்தில் என் முதல் நூலாக (121ஆவது நூலாக) வெளிவருவது இராமபிரானின் சித்தம் போலும்!

காலத்திற்கேற்ற நூல்களை வெளியிட்டுத் தமிழ் நாட்டில் சிறந்த முறையில் தமிழ்ப்பணியாற்றிவரும் பழநியப்ப சகோதரர்கள், இந்தச் சிறிய நூலையும் மனமுவந்து ஏற்று வெளியிட்டமைக்கு அவர்கட்கும், நூலைச் செவ்விய முறையில் அச்சிட்டுக் கற்போர் கரங்களில் கவினுடன் தவழச் செய்த ஏவியன் அச்சகத்தாருக்கும் என் மனமுவந்த நன்றி என்றும் உரியது.

கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கப் பிள்ளையார் சுழி போட்டுப் பல்லாண்டுகளாகக் கம்பன் திருநாள் நடத்தி வந்த கம்பன் அடிப்பொடி’ சா.கணேசனாருக்குப் பின்னர், முக்கிய வில் விசையாக இருந்து நடத்தி வருபவர் கம்பன் அடிசூடி பழ. பழநியப்பன்.

1. கம்பராமாயணம் - காப்பு