பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அஞ்சா நெஞ்சன் - 99

அவன் புய வலிமையைப் பாராட்டுகின்றான். தன்னை வென்றவனாகவே கருதுகின்றான்.

அடுத்து அநுமனை நோக்கி இராவணன் கூறுவது : "நான் இப்போது ஒரு கையால் குத்துவேன். உன் உயிர் நிலைத் திருக்குமேயானால், நீ இன்றுள்ளது போல் என்றும் இருப்பாய், உனக்கு வேறொரு பகை இல்லை."

உடனே அநுமன் இராவணன் எதிரே போய், "என் குத்தினால் உயிரொழிந்துவிடாமல் பேசினாயாதலால் நீ என்னை வென்றவனாவாய். உன் நிலை செவ்வனே நன்று” என்று கூறி, "உன் கடனைப் பெற்றுக்கொள்க’ என்று தன் மார்பைக் காட்டுகின்றான். உடனே இராவணன் தன்னுடைய நீண்ட பல வாய்களை மடித்துப் பற்களை நன்றாகக் கடித்துக் கொண்டும் கண்கள்தோறும் அனற்பொறிகள் உக்கிரமாக மேலெழவும் கோபித்துத் தன் கைகளால் குத்துகின்றான். விளைவு : இராவணன் தன் கைகளினால் குத்தித் தள்ளினபோது வெள்ளிப் பெருமலையான கைலாசம் போலச் சலிக்கின்றான். இதனால் உம்பர் உலகமெல்லாம் சலித்தன; தருமமும் சலித்தது; உண்மை, நற்குணம், சுருதி, நீதி, கருணை, தவம் ஆகிய அனைத்தும் சலித்தன. சிறிது நேரத்தில் அநுமன் அயர்ச்சி நீங்குகின்றான்.

(3) இலக்குவன் உடலைத் தூக்க முயல்தல் : இலக்குவ னுக்கும் இராவணனுக்கும் க்டுமையான போர் நிகழ்கின்றது. அதில் இராவணன் தான் நான்முகனிடம் பெற்ற வேற்படையை இலக்குவன்மீது எறிய, அஃது அவன் மார்பிடைச் செல்ல, அவன் அயர்ந்த நிலையில் இருக்கும் போது அவனைத் தூக்க முயல்கின்றான்.

"வெள்ளி யங்கிரி எடுத்தனன்

வெள்கினான் என்ன எள்ளில் பொன்மலை எடுக்கலுற்

றானென எடுத்தான்.""

அவனால் எடுக்க முடியவில்லை. எங்கிருந்தோ அநுமன் திடீ ரென்று ஓடிவந்து அவனைத் தூக்கிச் சென்றுவிடுகின்றான்.

56. யுத்த முதற்போர் - 209