பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அஞ்சா நெஞ்சன் 101

"நன்று நன்றுஎனா நாயகன் ஏறினன் நாமக் குன்றின் மேல்இவர் கோளரி

யேறுளனக் கூடி அன்று வானவர் ஆசிகள்

இயம்பினர் ஈன்ற கன்று தாங்கிய தாய்என

மாருதி களித்தான்."" (நாயகன் - இராமன்; குன்று - மலை; கோளரிசிங்கம்; வானவர் - தேவர்; ஆசிகள் - வாழ்த்துகள்)

இதனைக் கண்ட தேவர்கள் இப்போது மலையின்மீது ஏறிய சிங்கம்போல் உள்ளது” என்று வாழ்த்துகள் கூறுகின்றனர்; ஈன்ற கன்றைத் தாங்கிய தாயைப் போல் அநுமன் மனம் மகிழ்கின்றான்.

இந்தக் காட்சியைக் கம்பன் நன்கு அநுபவித்துப் பேசுவான் : வாமன மாணியாகி உலகளந்தபோது அத்திருமாலின் வடிவைச் சிறப்பாக அறிந்துள்ள அநுமன் அதிசயமடைகின்றான்; திருமாலின் வடிவைக் காணியாட்சி யாக (தனக்கே ஒரு பொருளாக) பழைய நாள் தொட்டுக் கொண்டுள்ள ஒருதனிக் கருடன் (அத்தன்மை நீங்கியதுபற்றி) நாணம் கொள்கின்றான்" மற்றொருவனாகிய அனந்தனும் (பாரம் தாங்கமாட்டாமல்) தலை நடுக்குறுகின்றான்.

மேலும் இக்காட்சியை அக்கவிஞன் வருணிப்பது :

"ஒதம் ஒத்தனன் மாருதி o

அதன.அகதது உறையும நாதன் ஒத்தனன் என்னிலோ

துயில்கிலன் நம்பன்,

59. யுத்த முதற்போர் - 219

60. இராமபிரானது திருவடி தன்மீது பட அப்பெருமானை இராமாவதாரத்தில் தாங்கியதனால் அதுமனுக்குச் சிறிய திருவடி என்றும், தானான தன்மையில் அப்பெருமானைத் தாங்கிச் செல்வதனால் கருடபகவானுக்குப் பெரிய திருவடி என்றும் பெயர் வழங்குவது வைணவ சம்பிரதாயம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/102&oldid=1360820" இலிருந்து மீள்விக்கப்பட்டது