பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/103

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


102 அண்ணல் அநுமன்

வேதம் ஒத்தனன் மாருதி,

வேதத்தின் சிரத்தின் போதம் ஒத்தனன் இராமன்வேறு

இதன் இல்லை பொருவே" " (ஒதம் - கடல்; உறையும் - வாழும்; நாதன் - திருமால் என்னிலோ - என்போமானால், நம்பன் - இராமன் துயில்கிலன் - உறங்குவான் அல்லன், வேதம் - மறை வேதத்தின் சிரம் - உபநிடதம் போதம் - ஞான சொரூபியாகிய பரம்பொருள்; பொருவு - உவமை)

பாடலைப் பன்முறை படித்து அநுபவிக்க வேண்டும். இன்னும், இன்னொரு விதமாகவும் பன்னி உரைப்பான்; இது மெய்ப்பொருளைச் சார்ந்தது.

"தகுதியாய் நின்ற வென்றி

மாருதி தனிமை சார்ந்த மிகுதியை வேறு நோக்கின்

எவ்வண்ணம் விளம்பும் தன்மை? புகுதிகூர்ந்து உள்ளார் வேதம்

பொதுவுறப் புலத்து நோக்கும் பகுதியை ஒத்தான் வீரன்;

மேலைத்தன் பதமே ஒத்தான்."" (தகுதியாய் - பொருத்தமாக, மிகுதியை - மேன்மையை பகுதி - பிரகிருதி, புகுதி கூர்ந்து உள்ளார் - அறிவு மிகுந்துள்ளாரான இருடியர்க்கு பகுதி- மூலப் பிரகிருதி, தன் பதம் - பரமபதம்)

அநுமனுக்கு மேலிருக்கும் இராமன் மூலப் பிரகிருதிக்கு மேற்பட்ட இடத்திலிருக்கும் பரமபதத்தை ஒத்திருப்பன். மூலப் பிரகிருதி அநுமனுக்கு ஒப்புமை."

61. முதற்போர் - 221

62. முதற்போர் - 222

63. மூலப் பிரகிருதி இருபத்து நான்கு தத்துவமாய்த் திருமாலுக்குச் சரீரமாக இருப்பது (சரீர - சரீரி பாவனை): இதுவே எல்லா உலகங்கட்கும் காரணமாவது. இந்த மூலப் பிரகிருதிக்கு மேற்பட்டிருக்கும் தானம், பரமபதம்: இது வைகுண்ட நாதன் வீற்றிருக்கும் இடம். இருபத்தைந்தாவது தத்துவம் புருஷன் (= ஆன்மா); இருபத்தாறாவது தத்துவம் பரமபுருஷன் (= புருஷோத்தமன் - பரமான்மா). இவையே வைணவ தத்துவம் என்பது.