பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


104 அண்ணல் அநுமன்

இதனைக் கவிஞன், அநுமன் தோளின்மீது இளைய பெருமாளின் தோற்றம், பொன்மயமான பெரிய மேருமலை வெள்ளிமயமான கைலாய மலைமீது விளங்கிற்று என்று சொல்லும்படியாக இருந்தது என்று வருணிக்கின்றான்."

(இ) அதிகாயன் வதைக்குப் பிறகு இந்திரசித்து போர்க்களம் புகுகின்றான். ஒருநிலையில் இந்திரசித்து இலக்குவனை நெருங்குகின்றான், தன் மனம் போல் விரைந்து செல்லுகின்ற தேரில். அந்நிலையில் அநுமன் அங்குப் போதருகின்றான். அவன் இளைய பெருமாளை நோக்கி,

"தோளின்மே லாதி ஐய!

என்றடி தொழுது நின்றான்."" உடனே,

"ஆளிபோன் மொய்ம்பி னானும் ஏறினன், அமரர் ஆர்த்தார். இலக்குவன் அங்ங்னமே ஏறியருளத் தேவர்கள் ஆரவாரம் செய்தனர். உடனே ஒரு மேகத்தின்மீது மற்றொரு மேகம் போர் செய்ய வந்தாற்போன்ற தன்மையுடையரான இலக்குவன், இந்திரசித்து என்ற அவ்விருவரும் ஒருவர்மீது ஒருவர் அம்புமாரிகளைப் பொழிந்துகொள்ளலாயினர்.

3; 39.

ஒருநிலையில் இலக்குவனின் வாகனமாகிய அநுமன் இந்திரசித்தின் தேர்க்குதிரையைக் கொன்று தேரை உருட்டி விடுகின்றான்.

'வதையின் மற்றொரு கூற்றன. மாருதி உதையி னாலவன்

தேரை உருட்டினான்." இன்னொரு நிலையில் அவன் தன் வாலினால் அரக்கர்களைச் சுற்றிக் கட்டித் துரவுவான்; கால்களால் மிதிப்பான்; நெட்டித் தள்ளிவிடுவான்; ஆகாயத்தில் தூக்கி

67. யுத்த. கும்பகர்ணன் வதை - 232 68. யுத்த. நாகபாசப் - 101 69. யுத்த நாகபாசப் - 101 70. யுத்த நாகபாசப் - 127