பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அஞ்சா நெஞ்சன் 105

எறிவான்; எதிர்சென்று அறைவான்; வெருட்டுவான் (740) எதிரிகள் அஞ்சும்படி விழித்துப் பார்ப்பான்; அதட்டுவான்; யானைகளை வீசி எறிந்து அவற்றால் கடல்களைத் தூர்ப்பான்; தோள்களைத் தட்டி ஆரவாரம் செய்வான்; கைகளால் ஆயிரம் தேர்களைப் பிடித்து இழுப்பான் (141); குதிரைகளைப் பூப்போலத் துவுவான்; யானைகளை நீர்போல அள்ளுவான்; காலாட்சேனைகளைத் தளிர் போலப் பிசைந்து துகைப்பான் (142); பாம்புகள் பூட்டப்பெற்ற ஆயிரம் தேர்களை விரைவாகத் துக்கித் தரையில் அடித்து அழியச்செய்வான் (143). இவற்றால் அஞ்சா நெஞ்சமும் வீரப்பண்பும் புலனாகின்றன.'

(ஈ) நிகும்பலை யாகத்தை அழிக்கச் சென்ற இலக்குவன் ஒரு நிலையில் அநுமன் வேண்டுகோட்கிணங்க அவன் தோளின்மீது ஏறுகின்றான். இந்திரசித்தினால் துன்புறுத்தப் பெற்ற அநுமன்' அயர்வு நீங்கி வந்து, முகம் மலர்ந்து,

"எந்தாய் கடிது ஏறாய்எனது

இருதோ ளின்மிசை என்றான்; அந்தாகஎன்று உவந்துஐயனும்

அமைவா யினன்இ மையோர் சிந்தா குலம்களைத் தான்என

நெடுஞ்சா ரிகைதி ரிந்தான்' (அந்து" ஆக - அப்படியே ஆகட்டும் உவந்து - மகிழ்ந்து இமையோர் - தேவர்கள்; சிந்தாகுலம் - வருத்தம்)

இதனால் இலக்குவன் மிகத் திறமையாகப் போர்செய்ய வாய்ப்பு ஏற்படுகின்றது.

(5 அநுமன் பல நிலைகளில் போர் புரிதல் : அநுமன் தன் பக்கமுள்ளவர் தோற்கையில், தோற்கும் நிலையில் இருக்கையில் அவர்கட்குச் சஞ்சீவி போல் வந்து உதவுவான்;

71. யுத்த. நாகபாசப் - 140 - 143

72. யுத்த நிகும்பலை யாகம் - 95, 96

73. யுத்த நிகும்பலை யாகம் - 102

74. அந்து - அப்படியே. கன்னடத்தினின்று தமிழில் வந்து வழங்கிய திசைச்சொல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/106&oldid=1361251" இலிருந்து மீள்விக்கப்பட்டது