பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/108

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அஞ்சா நெஞ்சன் 107

"முன்னினி எதிர்க்கிலேன்

என்று முற்றின பின்னிகல் பழுதெனப்

பெயர்ந்து போயினான்"

(3) அதிகாயனுக்கும் இலக்குவனுக்கும் போர் நடைபெறுகின்றது. மும்முறை மதயானைப் படையைக் கொண்டு எதிர்க்கின்றான், அதிகாயன். இம்மூன்று முறைகளிலும் இலக்குவன் யானைப்படைகளை அழித் தொழிக்கின்றான்." இந்நிலையில் அநுமனும் திடீரென்று பங்கு கொள்ளுகின்றான். மிகவும் வலிதாகிய ஒருமரத்தைப் பிடுங்கிக் கையில் வைத்துக்கொண்டு உருமேறுபோல் தோன்றிப் புடைக்க, பல மதயானைகள் திரள்திரளாகச் சென்று உயிர் மாய்கின்றன (158). தான் மிதித்த மிதியில் பலவற்றையும், விசையால் பலவற்றையும், வலிமையால் பலவற்றையும், இடறும் நடையினால் பலவற்றையும், காலினால் பலவற்றையும், வாலினால் பலவற்றையும், வாலின் துனியால் பலவற்றையும், நுதலால் பலவற்றையும், கொடியால் பலவற்றையும், பழகிய குதிப்பினால் பலவற்றையும், குமைத்தலினால் பலவற்றையும் கொன்று குவிக்கின்றான்(159). சில யானைகளைப் பிடித்து இழுத்தும், சிலவற்றை இருகூறாகப் பிளந்தும், சிலவற்றை நகங்களால் கீறியும், சிலவற்றை மூங்கில்போல் முரித்தும், சிலவற்றைத் தோலுரித்தும், சிலவற்றைப் பல துண்டங்களாகப் பிளந்தும், சிலவற்றைப் பற்களால் கடித்தும், சிலவற்றைக் கையால் பிடித்தும், கூட்டமாக நின்ற சில யானைகளின் நெடிய கோடுகளை முரித்தும் கொன்றொழிக்கின்றான்(160). சில யானைகளைக் கடலில் எறிவான்; நெடிய மரத்தைக்கொண்டு சாரி திரிந்து அலைத்து உருட்டுவான் நெடிய பூமியில் தள்ளி அரைப்பான் பிடித்துப் பூமியில் அடிப்பான்; குடலைப் பறித்துவிடுவான்; பறித்த குடல்களை வானத்தில் வீசி எறிவான்; மிதித்துக் கலக்குவான்; முகத்தில் உதைப்பான் (16).

80. யுத்த. கும்பகருணன் வதை 263 81. யுத்த. அதிகாயன்வதை - 150 - 156