பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108 அண்ணல் அநுமன்

பின்னும் அவன் தன் வாலினால் வெகுதூரம் மடங்க நெடிய மலைப்பாம்புபோல வளைப்பான்; வளைத்து அவ் யானைகளின்மீதுள்ள பாகனுடனே அவ்யானைகளை நெருங்கிய பெரிய மலைமீது செல்லும்படி மோதி உயிர் விலகச்செய்வான்; மற்றும் சில யானைகளைச் சிவனே என்னும்படியாக அகன்ற வாயிலிட்டு அதுக்குவான்; ஆயிரம் யானைகளை இமைப்பொழுதுக்குள்ளே உயிரொழிப்பான் (162), இங்ங்னமாக அநுமன் யானைகளை யொழித்த செய்திகளால் அவனது வீரப்பண்பும் அஞ்சா நெஞ்சுறுதியும் தெளிவாகின்றன."

(4) இந்நிலையில் தேவாந்தகன்' என்ற அரக்க வீரன் தன்னந்தனியனாகப் புகுந்து, கோடிக்கனைகளை அநுமன் மீது செலுத்தி ஆரவாரம் செய்கின்றான் (166). அப்போது அநுமனும் ஒரு மரத்தை உயர எடுத்து நின்று ஆரவாரித்தவனாய், இப்போது இவன் உயிர் பறிபோகும் என்று சொல்லி அவன்மீது எறிகின்றான். தேவாந்தகன் உடனே நெருப்பு உமிழும் கனையொன்றனால் அதனைப் பல துண்டங்களாகச் சிதைக்கின்றான் (167). அப்போது அதுமன் ஒரு மலையை வாங்க, அதனை எறிவதற்கு முன்னரே தேவாந்தகன் ஒர் அம்பெய்து அதனைப் பொடியாகும்படி சிதைக்கின்றான். உடனே மாருதி சினந்து, பருந்து புகுந்தாற்போல் தேவாந்தகன்மீது பாய்ந்து அவனுடைய நெடிய வில்லைப் பறித்திடுகின்றான் (168).

பறித்த வில்லை அநுமன் வானவர் மகிழப் பல துண்டுகளாகும்படி முரித்திடுகின்றான். அது மனது வலிமையைக் கண்ட தேவாந்தகன் சினம் மிகுந்தவனாய், தோமரம் என்னும் படையை அநுமனது இடத்தோளின்மீது நெருக்குமாறு எறிகின்றான்; அதனைக் கண்ட தேவர்களும் திகைக்கின்றனர் (169). அதனைக் கண்ட அநுமன் கண்களில் நெருப்புப் பொறி பறக்க மிகச் சினந்தவனாய் அத்தோ மரத்தைப் பறித்து, இடியேறு போல ஆரவாரித்துப் பலமாகப் 82. பாரதத்தில் யானைப்படைகளைக் கலக்கும் இவன் இளைய

சகோதரனான வீமனை நினைக்கின்றோம். 83. இவன் அரக்க சேனாபதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/109&oldid=1361257" இலிருந்து மீள்விக்கப்பட்டது