பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110 அண்ணல் அதுமன்

"முழைவாளரி யனையானையும்

எனையும்மிக முனிவாய் அழையாய்திரி சிரத்தோனையும்

நிலத்தோடும் இட்டுஅரைப்பான்."" (கைத்தலம் பிணையா - கைதட்டி மழையாம் என - மேகம் போல; வடமலை - மேரு முளைவாளரி யனையான் - இலக்குவன்; முனிவாய் - சினப்பாய்)

இதனைக் கேட்ட அநுமன், திரிசிரனையும் அழைத்து வந்தால் இருவரையும் கொல்லுவதற்கு வாய்ப்பு உண்டாகும் எனக் கூறுகின்றான்.

இதனைச் செவிமடுத்த திரிசிரன் வந்து சேர்கின்றான்.

"ஆமாம்எனத் தலைமூன்றுடை

யவன்.ஆர்த்துவந்து அடர்த்தான்."" அநுமனும் "எதிரே செருக் கொடுத்தான்" அந்தத் திரிசிரனுடைய தேர்மேல் குதித்து, அந்தத் திரிசிரசை ஒப்பற்ற வல்லமையுள்ள தன் கையாற் பிடித்துப் பூமியின்மீது தள்ளி அரைத்து, அவ்வரக்கனுக்குப் பழிப்பு மிகும்படி கொன் றொழிக்கின்றான். அதன்பிறகு, மேற்றிசை வாயிலைச் சென்றடைகின்றான், மாருதி"

(6) அநுமனும் இந்திரசித்தும் மோதுதல் : சுக்கிரீவனுக்கும் இந்திரசித்துவுக்கும் நடைபெற்ற போரில் சுக்கிரீவன் எறிந்த மராமரத்தை இந்திரசித்து துணித்துவிடுகின்றான்." இந்நிலையில் அநுமன் மிகக் கோபங்கொண்டு தன் உயர்ந்த தோளைத் தட்டி, இடிபோலப் பெருமுழக்கம் செய்து, இனி இந்திரசித்து அழிந்தொழிவான் என்று கண்டோர் சொல்லும்படி பெரியதொரு மலையை எடுத்து இந்திர சித்தின்மீது வீசி எறிகின்றான். அப்பொழுது அவ்வரக்கன் பொழிந்த சரமாரியால் அம்மலை மிக நுண்ணிய

86. யுத்த அதிகாயன் வதை - 176 87. யுத்த அதிகாயன் வதை - 177 88. யுத்த. அதிகாயன் வதை - 177 89. யுத்த. அதிகாயன் வதை - 178 90. யுத்த - நாகபாசப் - 71

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/111&oldid=1361262" இலிருந்து மீள்விக்கப்பட்டது