பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அஞ்சா நெஞ்சன் 111

துகள்களாகச் சிதறியொழிகின்றது. "உக்கது அக்கிரி சொரிந்த

  • , *, 31

வாளிகளின் ஊழிலாத சிறுபூழியாய்.

பிறிதொரு நிலையில் இந்திரசித்தன் விடுத்த சரமாரிகளைத் தன் உடலில் தாங்கியவண்ணம் மலைபோல் நிற்கும் மாருதி, தனது பற்களைக் கடித்துக்கொண்டு அங்குள்ள ஒரு வலிய மலையைப் பெயர்த்தெடுத்துக் கொண்டு நின்ற நிலையில்,"

"உலகிலுள்ள யானைகள் அனைத்தும் ஒருங்கே திரண்டாலும் குதித்துப் பாயும் தன்மையுள்ள கால்களையும் கொதிக்கின்ற கொடிய சினத்தையுமுடைய ஒரு சிங்கத்தின் எதிரில் நின்று வெல்லமாட்டுமா? இராமபிரானது திருத் தம்பியும் எம் தலைவனுமாகிய இளையபெருமாள் வருமளவும் தாமசித்திருக்கப் பொறாமல் என்னை வருத்துவா யானால், உன் அம்பு நான் எறியும் மலையை அழிக்க வருவதற்கு முன்னர் இம்மலை உன் உயிரைப் போக்கிவிடும்: வில்லாண்மையுள்ள நீ உன் ஆற்றலால் இம்மலை உன் உயிரை அழிக்கவொட்டாமல் பாதுகாத்துக்கொள்வாயாக' என்று கூறுகின்றான்.

இந்த வீரவாதத்துடன் ஒரு மலையை எறிய, அஃது இந்திரசித்தனின் வச்சிரமயமானதொரு மலைமீது பட்டதொரு மலைபோல விரைவில் பிளந்து, இடிபட்டுத் துரளாய்த் திக்குகளில் சிதறிப்போய்விடுகின்றது" மலை பொடியாக உதிர்ந்ததும் கடுஞ்சினங்கொண்ட இந்திரசித்து அநுமன்மீது ஆயிரக்கணக்கான அம்புகளைச் செலுத்து கின்றான். இந்நிலையில் அநுமனுக்குத் துணையாக நீலன் என்னும் வானரவீரன் வருகின்றான்."

(7) வச்சிர தம்ஸ்ட்ரன் இடபன் என்ற வானர வீரனுக்கும் இவனுக்கும் மோதல் நடைபெறுகின்றது. இடபன் அவனுடைய தேர்ப்பாகனை ஒரு மலையினால்

91. யுத்த - நாகபாசப். - 72 92. யுத்த - நாகபாசப் - 78 93. யுத்த - நாகபாசப் - 79 (வீர வாதம்) 94. யுத்த - நாகபாசப் - 80 95. யுத்த - நாகப்பாசப் - 81, 82.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/112&oldid=1361264" இலிருந்து மீள்விக்கப்பட்டது