பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/114

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அஞ்சா நெஞ்சன் 113

சொரிய, அவை அக்குரங்கு வீரனின் மார்பிலும் தோள் களிலும் பாய்ந்து நிற்கின்றன. அநுமன் வாய் வழியாகக் குருதியும் பொங்குகின்றது. இந்நிலையிலேயே, அநுமன் அரக்கன் தேரில் பூண்டிருந்த கோவேறு கழுதைகளைக் கொன்றொழிக்கின்றான்; தேரின் அச்சுகளை முரித்துச் சாரதியையும் மாளச் செய்கின்றான். அகம்பன் அதுமனை வில்லினால் வெல்வது அருமை எனக் கருதித் தெய்வதச்சன் வழங்கிய தண்டாயுதத்தை எடுத்துக்கொண்டு நேருக்கு நேரான போருக்குத் தயாராகின்றான். இருவரும் மோதுகின்றனர். ஒருநிலையில் அகம்பனுடைய தண்டாயுதம் அழிய, அநுமனும் தண்டாயுதத்தை எறிந்துவிட்டு மற்போர் புரிகின்றான். இதில் அகம்பன் உயிரிழக்கின்றான்."

இதுகாறும் கூறியவற்றால் அநுமனது போர்த்திறனும் அஞ்சா நெஞ்சமும் தெற்றெனப் புலனாவதைக் கண்டு தெளியலாம்.

100. யுத்த பிரம்மாத்திரப் - 134 - 139