பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


6. இராம தூதன்

'அநுமன் என்ற பெயரைச் சொன்னாலே கற்றவர் கல்லாதவர் மனத்தில் இராம தூதன்' என்ற கருத்து எழும். ஆனால், கம்பன் படைத்த இராமகாதையில் எந்த ஒர் இடத்திலும் கம்பன் வாக்காகவோ, இராமன் வாக்காகவோ ஒரு செய்தியைச் சொல்லி, "இதனை இன்ன இடத்திற்குச் சென்று, இன்னாரிடம் சொல்லி வா" என்பதாக இடம் பெறவில்லை. பிராட்டியைத் தேடி வருவதற்காகச் சுக்கீரீவனால் தென்றிசையில் அனுப்பப்பெற்றவர்களுள்' அநுமன் ஒருவன் என்றும், அவர்களுள் அறிவிற்சிறந்த அநுமனை இராமன் தனியாக அழைத்து, அவனிடம் பிராட்டியின் அவயவங்களை வருணித்தும்', பிராட்டியிடம் சொல்லுமாறு சில அடையாளங்களைக் கூறியும்,' கணையாழியைத் தந்து அனுப்பியதுமான குறிப்புகள்தாம் காவியத்தில் உள்ளன.

இது தவிர, இந்திரசித்து நாகபாசத்தால் அதுமனைப் பிணித்துத் தந்தையிடம் சென்று அரிஉருஆன ஆண்டகை, சிவன் எனச் செங்கணான் என்ன சேவகன் எனக் கூறி ஒப்படைக்கின்றான். அப்போது இராவணன் அநுமனை யார் என வினவும்போது அவன் மறுமொழியில் அவன் வாக்காக,

1. கிட்கிந்தை - நாடவிட்ட 5 - 33

2. கிட்கிந்தை - நாடவிட்ட. 33 - 65

3. கிட்கிந்தை - 67 - 73. அது மன் சீதைக்குக் கூறிய அடையாளங்களாகப் பெரியாழ்வார் திருமொழி (310)யில் ஒரு பதிகம் உள்ளது. அதுவே கம்பனுக்குத் தன் காவியத்தில் அமைத்துக் கொள்ளக் கைகொடுத்து உதவி இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் சுட்டியுரைப்பர்.