பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


116 அண்ணல் அநுமன்

என்று காட்டுவார். இதுகாறும் நாம் அதுமனைப்பற்றி அறிந்தவற்றால் அவனுக்கு இயற்கை அறிவு நன்றாக அமைந்துள்ளது என்பதை அறிவோம். அவனது ஆளுமை (Personality) மிக நன்றாகவே - எடுப்பாகவே - அமைந்துள்ளது என்பதையும் அறிவோம். அன்றியும்,

"காதல்நான் முகனாலும் கணிப்பரிய

கலையனைத்தும் கதிரோன் முன்சென்று ஒதினான் ஒதநீர் கடந்துபகை

கடிந்துஉலகை. உய்யச் செய்தான்."" என்பதனால் அவன் சூரியனிடமிருந்து கல்வி கற்றது பெறப்படுவதால் அவன் சிறந்த கல்வி அறிஞன் என்பதும் தெளிவாகின்றது. இவை மூன்றும் அவனிடம் பொருந்தி இருத்தலால் அவன் சிறந்த தூதனாகின்றான்.

(2) சிறந்த துரதனிடம் அஞ்சாமையும்" துணிவுடைமை யும்." தனக்கு வரும் ஏதத்திற்கு அஞ்சாமையும்" இன்றியமை யாதனவாக அமைந்திருக்கவேண்டும் என்பது பொய்யா மொழி. "தூதனாக வந்து இந்நகரத்தினுள் புகுந்தபின் நீ அரக்கர்களைக் கொன்றது என்ன காரணத்தால்?" என்று வினவ, அதற்கு அநுமன் சிறிதும் அஞ்சாது,

"காட்டுவார் இன்மை யால்கடி காவி

வாட்டி னேன்என்னைக் கொல்லவந் தார்களை வீட்டி னேன்.பின்னை மென்மையி னால்உன்றன் மாட்டு வந்தது காணும் மதியினால்"" என்று மறுமாற்றம் உரைக்கின்றான்.

(3) சிறந்த தூதனிடம் இருக்க வேண்டியவற்றை

"அன்பு:அறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு

இன்றி யமையாத மூன்று""

10. யுத்த - வீடணன் அடை . - 105 11. குறள் - 686 (6) 12. குறள் - 688 (8) 13. குறள் - 689 (9) 14. யுத்த பிணிவீட்டு - 108 15. யுத்த பிணிவீட்டு - 109 16. குறள் - 682 (2)