பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இராம தூதன் 117

என்ற குறளால். வற்புறுத்துவார், வள்ளுவப் பெருந்தகை, இராவணன் விடுத்த வினாக்களுக்கு அநுமன் விடையிறுத்த பாங்கினால் இவற்றை அறியலாம். இராவணன் விடுத்த வினாக்கள் : என்இவண் வரவுநீயாரை" என்று வினவியபின்,

"நேமியோ? குலிசியோ? நெடுங்க ணிச்சியோ?

தாமரைக் கிழவனோ? தறுகண் பஃறலைப் பூமிதாங்கு ஒருவனோ? பொருது முற்றுற நாமமும் உருவமும் கரந்து தண்ணினாய்' "

(நேமி - சக்கரப்படை (திருமாலோ?) குலிசி - வச்சிரப்படை (இந்திரனோ?) கணிச்சி - சூலாயுதம் (சிவபிரானோ?); தாமரைக்கிழவன் - நான்முகன்; பூமிதாங்கு ஒருவன் - ஆதிசேடன், பொருது முற்றுற போர் செய்து அழியுமாறு)

“நின்றுஇசைத்து உயிர்கவர் நீலக் காலனோ?

குன்றுஇசைத்து அயில்உற எறிந்த கொற்றனோ? தென்திசைக் கிழவனோ? திசைநின்ற ஆட்சியர் என்றுஇசைக் கின்றவர் யாருள் யாவன்நீ?" (காலன் - யமன், குன்று - மலை; அயில் - வேல்; கொற்றவன் - முருகன், தென்திசைக்கிழவன் - அகத்திய முனிவன்; திசைநின்று ஆட்சியர் - திக்குப் பாலகர்கள்) "அந்தணர் வேள்வியின் ஆக்கி ஆணையின் வந்துற விடுத்ததோர் வயவெம் பூதமோ? முந்தொரு மலருளோன் இலங்கை முற்றுறச் சிந்தெனத் திருத்திய தெறுகண் தெய்வமோ?”*

(அந்தணர் - முனிவர்கள்; ஆணை - கட்டளை, வந்து உற வந்து சேரும்படி சிந்து என அழித்துவிடு என்று)

"ஆரைநீ?" என்னைஇங்கு எய்து காரணம்? ஆருனை விடுத்தவர்? அறிய ஆணையால் சோர்விலை சொல்லுதி"

17. யுத்த பிணிவீட்டு - 69 18. யுத்த பிணிவீட்டு - 70 19. யுத்த பிணிவீட்டு - 71 20. யுத்த பிணிவீட்டு - 72 21. யுத்த. பிணிவிட்டு - 73