பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/119

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


118 அண்ணல் அநுமன்

என்று சரமாரியாக வினாக்களைத் தொடுக்கின்றான்.

இவற்றிற்குச் சொல்வன்மை மிக்க அநுமன் கூறும் மறுமொழியைக் காண்போம் :

"சொல்லிய அனைவரும் அல்லன், சொன்னஅப்

புல்லிய வலியினோர் ஏவல் பூண்டிலேன், அல்லிஅம் கமலமே அனைய செங்கண்ஒர் வில்லிதன் தூதன்யான்"..." என்று இரத்தினச் சுருக்கமாக ஒரு போடு போடுகின்றான், சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் ஆகிய அஞ்சனைச் சிங்கம் !’

சுருங்கச் சொன்னதை விரித்துப் பேசுகின்றான் - கோதில் சிந்தை அநுமன்:

"அனையவன் யார்?என அறிதி ஆதியேல்

முனைவரும் அமரரும் மூவர் தேவரும் எனையவர் எனையவர் யாவர் யாவையும் நினைவரும் இருவினை முடிக்க நின்றுளோன். (அறிதி ஆதியேல் - அறிய வேண்டுவையானால், முனைவர் - முனிவர்; மூவர் - திரிமூர்த்திகள் நின்றுளோன் - அவதரித்து நிலை பெற்றுள்ளவன்)

3, 24

என்று கூரிய சொற்களால் கூறிய மாருதி கம்பீரமாகத் தொடங்குகின்றான் - வெல்லும் சொல் இன்மை அறிந்து '

இவன் யார் தெரியுமா?

"ஈட்டிய வலியும் மேனாள்

இயற்றிய தவமும் யாணர்க் கூட்டிய படையும் தேவர்

கொடுத்தநல் வரமும் கொட்பும் தீட்டிய பிறவும் எய்தித்

திருத்திய வாழ்வும் எல்லாம் நீட்டிய பகழி ஒன்றால்

முதலொடு நீக்க நின்றான்' " 22. சுந்தர. பிணிவீட்டு - 74 23. குறள் - 647 (சொல்வன்மை) 24. பிணிவிட்டு - கிட்கிந்தை - 75 25. குறள் - 645 (சொல்வன்மை) 26. சுந்தர. பிணிவீட்டுப் - 76