பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராம தூதன் 149

(வலி - தேகபலம், யாணர் - புதிதாக கொட்பு - மற்றுமுள்ள சிறப்புகள், தீட்டிய - எழுதிய வாழ்வு - அரச வாழ்வு; பகழி - அம்பு முதலொடு - அடியோடு)

"இவன் தேவர் முதலியோர்களுள் ஒருவனும் அல்லன். பூவலயத்தை ஆண்ட புரவலன் புதல்வன்தான்: '

"வேதமும் அறனும் சொல்லும்

மெய்யற மூர்த்தி வில்லோன்”* “இந்த முதற் கடவுள் தசரதன் மதலையாகத் தோன்றுவதற்குக் காரணம் என்ன? சொல்லுவேன் :

"போர்அணங்கு இடங்கள் கவ்வப்

பொதுநின்று முதலே என்ற வாரணம் காக்க வந்தான்

அமரரைக் காக்க வந்தான்' ' (அணங்கு - வருத்தம் செய்யும்; இடங்கர் - முதலை; வாரணம் - யானை அமரர் - தேவர்)

"ஆதிமூலமே! என்று பொதுப்படக் கூவியழைத்த கசேந்திரனைக் காக்கவந்த நாராயணனே தேவர்களைக் காக்கும்பொருட்டு இராமனாக அவதாரம் செய்துள்ளான். மேலும் கூறுவேன் :

"மூலமும் நடுவும் ஈறும்

இல்லதோர் மும்மைத்து ஆய காலமும் கணக்கும் நீத்த

காரணன் கைவில் ஏந்திச் சூலமும் திகிரி சங்கும்

கரகமும் துறந்து தொல்லை ஆலமும் மலரும் வெள்ளிப்

பொருப்பும்விட்டு அயோத்தி வந்தான்' (மூலம் - முதல்; ஈறு - முடிவு, மும்மைத்து - இறப்பு, நிகழ்வு, எதிர்வு காலம் - காலத்தின் எல்லை; கணக்கு இடம், குணம் முதலியவற்றின் எல்லை; நீத்த

27. சுந்தர. பிணிவீட்டு - 77 28. சுந்தர. பிணிவிட்டு - 78 29. கந்தர. பிணிவிட்டு - 79 30. சுந்தர. பிணிவிட்டு - 80

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/120&oldid=1361279" இலிருந்து மீள்விக்கப்பட்டது