பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/122

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இராம தூதன் 121

உடனே இராவணன், "என்ன காரணத்தால் இராமன் வாலியைக் கொன்றான்? இப்போது இராமன் எங்கு உள்ளான்? அந்த இராமனின் மனைவியை அங்கதன் தேடக் காரணம் என்ன? என்று வினாக்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி விடுக்க, அதற்குச் சமீகரணன் தனயன் சொல்லும் மறுமாற்றம் இது :

"தேவியை நாடி வந்த

செங்கணாற்கு எங்கள் கோமான் ஆவிஒன்று ஆக நட்டான்,

'அருந்துயர் துடைத்தி என்ன, ஒவியர்க்கு எழுத வொண்ணா

உருவத்தன் உருமை யோடும் கோஇயல் செல்வம் முன்னே

கொடுத்துவா லியையும் கொன்றான்'

(நாடி - தேடி கோமான் - அரசன், நட்டான் - நட்புக்கொண்டான் என்ன - என்று வேண்ட ஒவியர் - சித்திரம் வரைவோர்; உருமை - சுக்கிரீவன் மனைவி; கோஇயல் செல்வம் - அரசியற்செல்வம்)

இதன்பின்னர் அன்றுவரை நடைபெற்ற வரலாற்றையும் கூறினான்.

இந்நிலையில் இராவணன் பரிகாசமாக, "ஒப்பில்லாத உங்கள் குலத்தலைவனைக் கொன்றிட்ட இராமனுக்கு அடிமைத்தொழிலை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள்! இஃது எவ்வளவு கேவலம்? இப்படிச் செய்த பின்னரும் உங்கள் புகழ் அழியாது உள்ளது. இஃது எதனைக் காட்டுகின்றது? உலகத்தாரின் பேதைமையை (மாதுமையை)’க் காட்டுகிறது" என்று பேசுகின்றான்.

தொடர்ந்து "அஃது இருக்கட்டும். தமையனைக் கொல்வித்த அன்புத் தம்பியான உங்கள் கூட்டத் தலைவன்

34. சுந்தர. பிணிவீட்டு - 85

35. மாதுமை - பேதைமை (=மாதின் தன்மை) "நுண்ணறிவோடு நூலோடு பழகினும் பெண்ணறிவு என்பது பெரும் பேதைமைத்தே" என்பது ஆன்றோர் வாக்காதலால் பேதைமை மாதுமை என்று சுட்டப்பெற்றது என்பது அறியப்படும். இஃது ஆண் ஆதிக்கத்தால் எழுத்த வாக்கு !