பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/123

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


122 அண்ணல் அதுமன்

சுக்கிரீவன் ஏவ நீ எனக்குச் சொல்லத்தக்கது யாது? தூது வந்த நீ போர் செய்ததற்குக் காரணம் என்ன?’ என்று வினவுகின்றான், இலங்கை வேந்தன்.

(5) இராவணன் சொல்லிய சொற்களையெல்லாம் ஒன்றுசேர்த்துப் பார்த்து யாவர்க்கும் பொதுவான நீதியை எடுத்துரைத்தால் தக்கதாக அமையும் எனக் கருதுகின்றான், மாருதி'

"திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்

பொருளும் அதனினுஉங்கு இல்" " என்ற வள்ளுவப்பெருந்தகையின் கருத்தை உன்னிப் பேசுகின்றான்; மறுமாற்றம் உரைக்கின்றான்.

"நான் நின்னிடம் தூதனாய் வந்தது எங்கள் தலைவன் சுக்கிரீவன் சொன்னவற்றை நின்னிடம் தெரிவிப்பதற்கே யாகும்; அவை இச்சமயத்திற்கு ஏற்றவை; நீதி பொருந்தியவை; குற்றமற்றவை; அவற்றை நல்லன என்று செவிமடுத்து உணர்வாயாயின் தகுதியை விளைவிப்பவை. அவற்றையே நின்னிடம் சொல்லுகின்றேன்.""

(அ) "நினது வாழ்க்கையை நீ வீணே போக்கிக் கொண்டாய், அரச அறத்தைச் சிறிதும் நோக்கினாய் இல்லை; பிறன் மனைவியை விரும்பிக் கவர்வதைச் செய்துவிட்டாய்; அதனால் உனக்கு அழிவு நெருங்கியுள்ள தானாலும், இனிமேலாயினும் ஒர் உறுதிச் சொல்லைக் கேட்டு அதன்படி நடக்கக் கடவாய் அப்படி நடப்பாயானால் நினது உயிரை நெடுங்காலம் ஒம்புவானாவாய்"

(ஆ) "பிறர் வருத்தினாலும் கற்புநிலை கெடாதவளும் நெருப்பினும் தூய்மையுடையவளுமான பிராட்டியைத் துன்பப்படுத்தியதால் பாவத்தால் ஐம்புலன்களை வென்று பேணியதும் நீங்குதற்கு அரியதுமான மாபெரும் தவத்தின் பயன் உங்களைவிட்டு நீங்கப்பெற்றீர்கள்: '

36. சுந்தர. பிணிவிட்டு - 90 37. குறள் - 644 (சொல்வன்மை) 38. சுந்தர. பிணிவீட்டு - 91 39. கந்தர. பிணிவிட்டு - 92 40. சுந்தர. பிணிவீட்டு - 93