பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராம தூதன் 123

(இ) “நல்லறிவையுடைய தேவர்களை வென்று, அதனால் எழுந்த பூரிப்பு(செருக்கு உங்களிடத்து வரம்பு கடந்ததனால், ஒப்பற்றதாகிய பெருமை உங்களை விட்டு முன்னரே நீங்கிப்போயிற்று, எஞ்சியுள்ள பெருமை இன்றைய தினமே அழிந்துவிட்டது; மற்றைச் சிறுபான்மையுள்ளதும் இன்றைக்கு நின்று நாளைக்கு அழிந்து நிற்குமேயல்லாமல் அழிவின்றி நிலைத்து நிற்குமோ?"

(ஈ) "பாவமானது புண்ணியத்தை வெல்லமாட்டாது" என்ற உண்மையினை, மூத்தோர் மொழியை மனங் கொள்ளாது கைவிட்டாய் ஒன்றையும் ஆலோசியாமல் மாதவத்தால் வந்த துய்மையைத் துாய்மையுடைய பிராட்டியின் திறத்து உண்டான ஆசை நோயினால் போக்கிக் கொள்பவனாகின்றாய்.""

(உ) "நேர்மைக்கு மாறான காமச் செருக்கினால் நேரிய வழியை மறந்துவிட்டுத் தங்கள் தங்கள் அறிவில் மயங்கியவர்கள் இழிந்து இறந்து கீழ்மையுற்று அத்தாழ்வில் மேம்படுவரேயன்றி அறந்திறம்பி நடந்தவர்களுள் அழியா வாழ்வுடையரானவர் எவுர்?"

(ஊ) "உலகத்தை ஆண்ட அரசர்களுள் காமத்தால் கெட்டொழிந்தவர்களின் தொகையைக் கணக்கிடத் தொடங்கினால் அஃது அளவிறந்ததாகவே முடியும்"

(எ) அறிவொழுக்கங்களில் சிறந்தவர்கள் பொருளாசை யும் சிற்றின்ப ஆசையும் தவிர வேறு இருள் உண்டு என்று நினையார்; வறியோர்க்குக் கொடுத்தலும் எல்லா உயிர் களிடத்துக் கொள்ளும் கருணையும், பொருளாசை சிற்றின்ப ஆசை ஆகியவற்றினின்று நீங்குதலும் ஆகிய இவையேயன்றி வேறு ஒரு தெளிவு உள்ளதென்றும் நினையார்'

(ஏ) ஆசையை அடக்குதலின்றி அது செல்கிற வழியே அறிவைப் போகவிட்டு அயலார் மனைவியை விரும்பி

41. சுந்தர. பிணிவீட்டு - 94 42. சுந்தர. பிணிவீட்டு - 95 43. சுந்தர. பிணிவீட்டு - 96 44. சுந்தர. பிணிவீட்டு - 97 45. சுந்தர. பிணிவீட்டு - 98

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/124&oldid=1361288" இலிருந்து மீள்விக்கப்பட்டது