பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/125

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


124 அண்ணல் அநுமன்

எந்நாளும் பிறர் தன்னை இகழ்ந்து சிரிக்கும் ஏளனச் சிரிப்பு தோன்ற, நாண் இல்லாதவனாய், உடம்பு காமதாபத்தால் உலரப்பெற்றுப் பழிப்பை அடைகின்ற இழிவான ஆண் தன்மையும் சிறந்த குணங்களுள் ஒன்றாகச் சேருமோ?"

(ஐ) "இந்நிலவுலகத்தை ஆண்டு காலம் சென்ற அரசர்களுள் உன்னளவு நீதியறியும் திறமுடையவர் யாவருளர்? வேதங்களில் விதிக்கப்பெற்றுள முறைமை வழியில் செல்லுகின்ற விருப்பத்தையுடையவனாக இருக்கின்ற நீ, அறநெறியின் வரம்பு கடந்து ஒழுகக் கடவையோ?"

(ஒ) தன்னை விரும்பாத ஒரு மாதை விரும்பி அவளால் வெறுத்து ஒதுக்கப்பெற்ற பின்னர், அந்த இழிவினால் உடனே இறந்து போகாமல் உயிரோடு வாழ்கின்ற வாழ்வைக் காட்டிலும், முகத்தில் உயர்ந்திருக்கின்ற மூக்கு ஒருவரால் அறுக்கப்பெற்றால் அந்நிலை அழகு எனல் ஆகுமோ?"

(ஒ) "மிக்க வலிவுடைய இருபது கைகளும் பத்துத் தலைகளும் உனக்கு உள என்றும், அதனால் ஒரு தலையும் இரு கைகளையுமேயுடைய இராமனுக்கு அஞ்ச வேண்டியதில்லை எனக் கருதிச் செருக்கடைய வேண்டா. ஆயிரம் தலைகளும் இரண்டாயிரம் கைகளும் உண்டானாலும் அவை உன்னைப் பாதுகாக்க மாட்டா; அவை யாவும் பெருநெருப்பில் பட்ட ஆடைப் பொதிபோல் இராமனது பராக்கிரமத் தீயில் எளிதில் அழிந்து போகும்."

(ஒள) "சிவபெருமான், நரம்பு இழைத்த நின் பாடல் களுக்காக மனமுவந்து நல்கிய வரம் நீ முறை தவறியதனால் தவறிப்போனாலும் போகும் மறை பிறழாத இராமனது சரம் பிழைக்கும் என்று கருதுதல் தகுமோ?"

46. சுந்தர. பிணிவீட்டு - ??

47. சுந்தர. பிணிவீட்டு - 100

48. கந்தர. பிணிவீட்டு - 101. மூக்கறுபடல் அழகுடையதன்று என்பது வெளிப்படை தன்னை விரும்பாத ஒருத்தியைக் காதலித்து, அணுகித் தன் கருத்தை அவள் பக்கல் கூறி அவளால் சீசீ போ என்று மறுக்கப்பெற்ற பின்பு உயிர் வாழ்தல் அதனினும் அழகற்றது என்பது கருத்து.

49. சுந்தர. பிணிவீட்டு - 102

50. சுந்தர. பிணிவிட்டு - 103