பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/128

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இராம தூதன் 127

பொறுமை என்பதொரு குணமும், கற்பென்ற ஒரு குணமும் ஒருங்கு கூடிக் களிநடம் புரியக் கண்டேன்.” (62)

(உ) 'நீ பிராட்டியின் கண்களிலும் உள்ளாய்; மனத்திலும் இருக்கின்றாய்; வாயின் எல்லையிலும் நீ உள்ளாய் இரு கொங்கைகளின் முகட்டிலும், இடைவிடாமல் காமவேள் மலரம்புகளால் தொளைத்த புண்களிலும் நீ உள்ளாய். இந்நிலையில் நின்னை அவள் பிரிந்துள்ளாள் என்பது எப்படிப் பொருந்தும்” (63)

(ஊ) "இலங்கை மாநகரில் காலை மாலை இல்லாத கற்பகக்கா என்னும்படியான அசோக வனத்தில் உம்பி புல்லினால் தொடுத்த குடிசையில் தவம் செய்த தவம் என்று சொல்லும்படியான மங்கை இருந்தாள்” (64)

(எ) "விருப்பமில்லாத பெண்ணை இராவணன் தொட்ட்ால் அவன் தலை எண்ணற்ற பிளப்புகளாய் வெடிக்கும் என்ற நான்முகனின் சாபம் இருப்பதால், அவன் பிராட்டியின் திருமேனியைத் தொடுவதற்கு அஞ்சுவான். அதனால்தான், அவள் இருந்த நிலத்தோடு பெயர்த்துக் கொண்டு போனான்.” (65)

(ஏ) "அவன் பிராட்டியைத் தொடவில்லை என்பதற்குச் சான்றுகள் : நான்முகன் படைத்த அண்டங்கள் பிளந்தில: அனந்தன் தலை கிழிந்திலது கடல்கள் பொங்கி மேல்வழிந்த தில்லை; சுடர்களும் உடுக்களும் கீழே விழுந்தில; வேதமும் வேத விதிப்படி செய்த கருமமும் அழியவில்லை. இவற்றால் அந்த உண்மை நிலை பெற்றுள்ளது.” (66)

(ஐ) "சோகத்தாளாகிய பிராட்டி கற்பு நிலை குன்றாதிருத்தலால் தேவர்களின் மனைவிமாரும் இப்போது தொழுதற்கு ஒத்த பெருமையை அடைந்தனர்; இனி, அப்பனின் இடப்பாகத்திலுள்ள அம்மை அவன் தலையில் இருப்பதற்கேற்ற சிறப்பை அடைந்தாள், செந்தாமரை மலரில் இருக்கும் திருமகளும் திருமாலின் மார்பை நீங்கி அவனுடைய ஆயிரம் தலைகளில் இடம் பெற்றவளாகின்றாள். (67)

(ஒ) "இலங்கை நகர் முழுவதும் தேடி, இராவணனின் இருப்பிடத்தை அடைந்து, அங்குள்ள மகளிரையெல்லாம்